Ajith Bike Tour : நடிகர் அஜித்தின் பைக் டூர் பிளான் இதுதான்!

நடிகர் அஜித் உலகம் முழுவதும் சுற்றுபயணத்தை விரைவில் தொடங்கவுள்ளார். இதை அஜித்தின் மேலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ajith bhutan world tour

நடிகர் அஜித்திற்கு பைக், கார் என்றால் கொள்ளை இஷ்டம் என்பது எல்லாருக்கும் தெரியும். இதுமட்டுமில்லாமல் துப்பாக்கி சுடுதலிலும் ஆர்வம் காட்டி முறையாக கற்றுக்கொண்டார் அஜித். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.அஜித் 62வது படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.சில காரணங்களால் அஜித்-விக்னேஷ் சிவன் கூட்டணி இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

bike racer ajith

இந்நிலையில் நடிகர் அஜித் விரைவில் உலகம் முழுவதும் தனது பைக்கில் டூர் செல்ல இருப்பதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.

அஜித்தின் பைக் டூர்

அஜித் உலகம் முழுவதும் சுற்றுலா பயணத்தின் முதல் சுற்றில் நேபால் மற்றும் பூட்டான் நாடுகளை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். ஜூன் மாதம் தொடங்கவுள்ள ’விடாமுயற்சி’ படப்பிடிப்பில் அஜித் கலந்துக்கொண்டு, ஷூட்டிங் முடிந்தவுடன் நவம்பர் மாதம் உலக சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்க இருக்கிறாராம்.

bike racer ajith tour

அஜித் பூட்டான் பயணத்தின் போது பல கடுமையான வானிலையை எதிர்க்கொண்டு இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் கடந்து நேபால் மற்றும் பூட்டானை சென்றடைந்தார் எனக்கூறி சுரேஷ் சந்திரா அஜித்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

ajith bike world tour

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP