
2023ல் கூகுள் தேடு தளத்தில் அதிகம் தேடப்பட்ட டாப் 5 தமிழ் நடிகர்கள் தகவல் கூகுள் நிறுவனத்திடமிருந்து கிடைத்துள்ளது. இதில் ஒரு பிரபல நட்சத்திரம் முதலிடத்தை பிடித்திருக்கிறார். 2023ஆம் ஆண்டு கோலிவுட் வட்டாரத்தினருக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வசூலை வாரி குவித்தன.
அதே போல நல்ல கதையம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் 2023ல் கூகுள் தேடு தளத்தில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர் யார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

முதலிடத்தை நடிகர் விஜய் பிடித்திருக்கிறார். இரண்டாமிடத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் அடுத்தடுத்த இடங்களில் தனுஷ், சூர்யா, அஜித் ஆகியோரும் உள்ளனர். 2023ல் விஜய் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசுத் திரைப்படம் சீரியல் போல இருந்தாலும் அது பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தி கணிசமான வருவாயைப் பெற்றது.
Top 5 Most Googled Kollywood Actors in 2023
— Ayyappan (@Ayyappan_1504) December 11, 2023
1. #Vijay
2. #Rajinikanth
3. #Dhanush
4. #Suriya
5. #AjithKumarpic.twitter.com/Dj7sNuSRse
மேலும் படிங்க Best Tamil Movies : 2023ன் டாப் 5 தமிழ் திரைப்படங்கள்
அதே போல லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ திரைப்படம் வசூலை குவித்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் லியோ வெளியானதால் இந்தப் பட்டியலில் விஜய் முதலிடம் இடம்பிடித்தது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த ஜெயிலர் திரைப்படம் இந்தாண்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே கூகுள் தேடலில் ஜெயிலர் திரைப்படம், ஜெயிலர் NEAR ME ஆகியவை இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர்கள் பட்டியலில் ரஜினிகாந்த் இடம்பிடித்துள்ளார்.

மேலும் படிங்க 2023ல் அதிக சம்பளம் வாங்கிய தமிழ் நடிகர்! யார் முதலிடம் தெரியுமா ?

அஜித், தனுஷ் ஆகியோர் துணிவு, வாத்தி என இந்தாண்டு ஒரு படத்தில் நடித்திருந்தாலும் கூட அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியலில் இடம்பெறுகின்றனர். சூர்யாவுக்கு இந்தாண்டு படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் கங்குவா கிடைக்கும் ஹைப்பில் மூலம் டாப் 5-ற்குள் வந்துவிடுகிறார்.

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com