herzindagi
image

Winter Skin Care: குளிர்காலத்தில் உங்கள் முகத்தை வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் டாப் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்

Skin Care Tips: குளிர்காலத்தில் உங்கள் முகத்தை வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்குகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம். இதன் மூலம் உங்கள் சருமத்தை பாதுகாப்பாக பராமரிக்க முடியும்.
Editorial
Updated:- 2025-12-06, 10:03 IST

குளிர்காலம் வந்து விட்டால் நம்மில் பலருக்கு சருமம் வறண்டு, செதில் செதிலாக மாறத் தொடங்கும். காற்றில் குளிர்ச்சி அதிகரிக்கும் போது, ஏற்கனவே வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு அதன் நிலைமை இன்னும் மோசமாகலாம். கடுமையான வறட்சி, அரிப்பு மற்றும் திட்டுகள் போன்ற பிரச்சனைகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், நீரேற்றத்துடனும் வைத்திருக்க, கூடுதல் ஈரப்பதமூட்டுதல் மிகவும் அவசியம் ஆகும்.

குளிர்கால சரும வறட்சியை போக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்:

 

சருமத்தின் வறட்சியை போக்கவும், இயற்கையான பொலிவை பெறவும் கடைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த கிரீம்களை விட, உங்கள் வீட்டிலேயே எளிமையாக கிடைக்கும் இயற்கை பொருட்களை கொண்டு ஃபேஸ்பேக்குளை தயாரிக்கலாம். இந்த ஹோம்மேட் ஃபேஸ்பேக்குகள், உங்கள் சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து, புத்துணர்ச்சியுடனும், மென்மையுடனும் வைத்திருக்க உதவும். இதில், வறண்ட சரும பிரச்சனையை போக்க உதவும் வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய ஃபேஸ்பேக்குகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

 

குளிர்கால வறட்சிக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஃபேஸ்பேக்:

 

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஆகிய இரண்டுக்கும் ஈரப்பதமூட்டும், அன்டிமைக்ரோபியல் (Antimicrobial) மற்றும் சருமத்தை சீரமைக்கும் பண்புகள் உள்ளன. இது, இந்த ஃபேஸ் பேக்கை சருமத்திற்கு அதிகப்படியான அளவிற்கு ஊட்டமளிக்கக் கூடியதாக மாற்றுகிறது. தேங்காய் எண்ணெய் ஆழமான ஈரப்பதத்தை அளிக்கிறது. தேனின் அன்டிமைக்ரோபியல் பண்புகள் சருமத்தை பாதுகாக்கிறது. சருமத்தின் மென்மையையும், பளபளப்பையும் இது அதிகரிக்கிறது. இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் எடுத்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் சமமாக தடவ வேண்டும். பின்னர், 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இது உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.

மேலும் படிக்க: Winter Skin Care Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தின் பொலிவை தக்கவைக்க உதவும் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக் இதோ

 

வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க வாழைப்பழம் மற்றும் தேன் ஃபேஸ்பேக்

 

வாழைப்பழம் மற்றும் தேன் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஊட்டமளிக்கும் ஃபேஸ் பேக், உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவதுடன், மிகவும் மென்மையாக மாற்றும். வாழைப்பழம் மற்றும் தேன் இரண்டும் இயற்கையான ஈரப்பதமூட்டிகள் ஆகும். சருமத்துக்கு உடனடி மென்மையையும், ஊட்டச்சத்தையும் இது வழங்குகிறது. வறண்ட மற்றும் அயர்ச்சி அடைந்த சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க இது உதவுகிறது. இதற்காக ஒரு பழுத்த வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்க்கவும். அதை மென்மையான பசையாக மாறும் வரை கலக்கவும். இதை சருமத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் உலர விடவும். பின்னர், குளிர்ந்த நீரால் கழுவி விடலாம்.

Honey face pack

 

ஆழமான ஈரப்பதம் அளிக்கும் பால் மற்றும் தேன் ஃபேஸ்பேக்:

 

மிகவும் எளிமையான இந்த ஃபேஸ்பேக் உங்கள் சருமத்தில் அதிசயங்களை செய்ய முடியும். பால் மற்றும் தேன் இரண்டும் இயற்கையின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். பாலில் வைட்டமின் பி, ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் (Alpha Hydroxy Acids), கால்சியம் மற்றும் அன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது எரிச்சலடைந்த சருமத்தை அமைதிப்படுத்தி, நீரேற்றத்தை அளிக்கிறது. இந்த ஃபேஸ்பேக்கை தயாரிக்க 2 தேக்கரண்டி பால் எடுத்து, அதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை முகம், கழுத்து, முழங்கைகள் மற்றும் முழங்கால்கள் உட்பட உங்கள் சருமம் முழுவதும் தடவலாம். சில நிமிடங்களுக்கு பின்னர் கழுவி விடலாம்.

மேலும் படிக்க: Winter Hair Care: குளிர்காலத்தில் வெதுவெதுப்பான எண்ணெய் குளியல் மூலம் உங்கள் கூந்தலுக்கு கிடைக்கும் அற்புத பயன்கள் என்னென்ன?

 

வறண்ட சருமத்திற்கு முட்டையின் மஞ்சள் கரு மற்றும் பாதாம் எண்ணெய் ஃபேஸ்பேக்:

 

முட்டையின் மஞ்சள் கருவில் பெரும்பாலும் கொழுப்புகள் (Fats) இருப்பதால், இது ஒரு சிறந்த ஈரப்பதமூட்டும் காரணியாக செயல்படுகிறது. மறுபுறம், பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் (Monounsaturated Fatty Acids), புரதங்கள், பொட்டாசியம், சின்க் மற்றும் பல தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பாதாம் எண்ணெய், வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முழங்கைகள், முழங்கால்கள் போன்ற மிகவும் வறண்ட பகுதிகளில் இது அதிக பலன் அளிக்கிறது. முட்டையின் மஞ்சள் கரு மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் ஒன்றாக கலக்கவும். இதை முகம், பாதங்கள், முழங்கைகள் மற்றும் முழங்கால்கள் போன்ற வறண்ட பகுதிகளில் தடவலாம். முட்டையின் வாசனையை போக்க, சில துளிகள் எலுமிச்சை சாறை சேர்க்கலாம்.

Milk Face Pack

 

குளிர்கால பளபளப்புக்கு கற்றாழை மற்றும் தேன் ஃபேஸ்பேக்:

 

கற்றாழையில் உள்ள அதிக ஈரப்பதமூட்டும் பண்புகள், அதை ஒரு இயற்கையான சரும பராமரிப்பு பொருளாக மாற்றுகிறது. இந்தக் கற்றாழை ஜெல்லை தேனுடன் கலக்கும் போது, வறண்ட சருமத்திற்கான ஒரு தீர்வாக மாறுகிறது. கற்றாழை எரிச்சலடைந்த சருமத்துக்கு நன்கு இதமளிக்கும். 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் முழுவதும் மென்மையாக தடவ வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடலாம்.

 

இதில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். இதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை கட்டுப்படுத்த முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com