
ஒரு நடிகரின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் கிரவுட் புல்லிங் திறனைப் பொறுத்து அவருக்கு தயாரிப்பாளர்கள் ஊதியம் வழங்குகின்றனர். ஒரு படத்தின் மொத்த வியாபாரமும் நடிகர்களுக்கான ஊதியத்தை நிர்ணயிக்கும் போது கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் 2023ஆம் ஆண்டு ஒரு படத்திற்கு அதிக ஊதியம் பெற்ற நடிகர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தர்பார், அண்ணாத்த படங்கள் ரசிகர்களுக்குத் திருப்தி கொடுக்கவில்லை என்றாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது ஊதியத்தை குறைக்கவில்லை. ஜெயிலர் படத்திற்கு அவர் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 120 கோடி ரூபாய் ஊதியம் பெற்றதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயிலர் திரைப்படம் 575 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனமும் அறிவித்திருந்தது. படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததையடுத்து ரஜினிகாந்திற்கு சொகுசு காரும் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் படிங்க 21 Years of Trisha - தனலட்சுமி, ஜெஸ்ஸி, ஜானு… திரிஷாவின் திரையுலக பயணம்

படம் நன்றாக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி விஜய்யின் திரைப்படங்கள் குறிப்பிட்ட வசூலை ஈட்டி விடும். கே.ஜி.எஃப் 2 படத்துடன் மோதிய பீஸ்ட் படம் தோல்வி அடைந்தாலும் விஜய் தனது ஊதியத்தை குறைக்கவில்லை. வாரிசு படத்திற்கு 105 கோடி ரூபாயும், லியோ படத்திற்கு 110 கோடி ரூபாயும் விஜய் ஊதியமாகப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. தளபதி 68 படத்திற்கும் இதே அளவிலான ஊதியம் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்-போனி கபூர்-விநோத் துணிவு படத்திற்காக இணைந்தனர். பொங்கல் விருந்தாக துணிவு திரைப்படம் வெளியானது. இந்தப் படத்திற்கு அஜித் 95 கோடி ரூபாய் ஊதியமாகப் பெற்றுள்ளார். துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க அஜித் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார். துணிவு படத்திற்கு வாங்கிய ஊதியத்தை விட இந்தப் படங்களுக்கு அதிக ஊதியம் வாங்கியுள்ளார்.

விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்த நிலையில் 400 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியது. இதையடுத்து கமல்ஹாசன் தனது ஊதியத்தை உயர்த்தியுள்ளார். மணிரத்னத்தின் தக் லைஃப் மற்றும் பேன் இந்தியா படமான பிரபாஸின் கல்கி படத்தில் நடிக்க கமல்ஹாசன் தலா 65 முதல் 70 கோடி ரூபாய் வரை பெற்றதாகத் திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிங்க கைதி 2 - முக்கிய தகவலை பகிர்ந்த நடிகர் நரேன்

சூர்யாவுக்கு இந்தாண்டு படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் ஜெய் பீம், சூரரைப் போற்று, விக்ரம் படங்கள் பெற்ற வெற்றி அவரை இந்தப் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது. பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் கங்குவா படத்திற்காக சூர்யா 50 கோடி ரூபாய்க்கு மேல் ஊதியம் பெற்றுள்ளார். சுதா கொங்கராவுடன் இணையும் படத்திற்கு கங்குவாவை விட அதிக ஊதியம் பெற இருக்கிறார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com