herzindagi
image

இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இந்த 5 உணவுகளை அவசியம் சாப்பிடவும்

இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 உணவுகள் குறித்து இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது இருதய ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கலாம்.
Editorial
Updated:- 2025-12-03, 19:03 IST

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால், நம் இருதயத்தின் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. நாளடைவில் இரத்தக் குழாய்கள் சுருங்குவது, அடைப்புகள் ஏற்படுவது போன்ற தீவிரமான பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கிறது.

இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்:

 

எனவே, இருதயம் சீராக இயங்கவும், இரத்த குழாய்கள் சுத்தமாக இருக்கவும் உதவும் உணவுகள் குறித்து இதில் காணலாம். இவை நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன.

 

ஓட்ஸ்:

 

ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. ஓட்ஸில் உள்ள பீட்டா-குளூகான்கள் (Beta-glucans) இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்ய உதவுகின்றன. மேலும், இது உடலின் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது.

Oats

 

மேலும் படிக்க: Benefits of cashews: முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

 

முருங்கை:

 

இதில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. குறிப்பாக, அன்டிஆக்சிடென்ட்ஸ், வைட்டமின்கள் போன்றவை உள்ளன. முருங்கையில் உள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள், இருதய ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் திறனை கொண்டுள்ளன.

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் 6 உணவுகள்; இவற்றை மிஸ் பண்ணாதீங்க மக்களே

 

வால்நட்:

 

வால்நட்களில் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (Alpha-linolenic Acid) எனப்படும் ஆரோக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. இந்தச் சத்து, தமனிகளை சுத்தம் செய்வதிலும், உடலின் தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பின் அளவை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

வெந்தயம்:

 

வெந்தயத்தில், கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு மாற்றத்தை உருவாக்கக் கூடிய சத்துக்கள் உள்ளன. வெந்தயத்தை உணவில் சேர்ப்பது, இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது அல்லது உணவில் சேர்ப்பது நன்மை அளிக்கும்.

Fenugreek

 

கறிவேப்பிலை:

 

கறிவேப்பிலை இருதய ஆரோக்கியத்தை பலப்படுத்துவதில் ஒரு ஆற்றல் மையம் போன்று உள்ளது. இதில் அன்டிஆக்சிடென்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இவை கொலஸ்ட்ரால் ஆக்ஸிஜனேற்றத்தை குறைக்க உதவுகின்றன, அழற்சியை எதிர்க்கின்றன மற்றும் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.

 

இந்த உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய இருதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com