
நாம் அன்றாடம் அருந்தும் பானங்கள் புத்துணர்ச்சி அளிப்பதாக நினைக்கிறோம். ஆனால், அவற்றில் சில நமது சருமத்தின் ஆரோக்கியத்தை சேதப்படுத்துகின்றன. இளமையாகவும், பளபளப்பாகவும் தோற்றம் அளிக்க உதவும் கொலஜனை இவை சேதப்படுத்துகின்றன.
மேலும் படிக்க: முகத்தில் வளரும் தேவையற்ற முடி; இந்த வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி எளிதாக அகற்றலாம்
அந்த வகையில், உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில வகையான பானங்களை இதில் காணலாம். இவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
வண்ணமயமான மற்றும் சர்க்கரை நிறைந்த குளிர்பானங்கள் குடிப்பதற்கு சுவையாக இருக்கலாம்.. இவை உடனடி ஆற்றலை அளித்தாலும், கிளைகேஷன் (Glycation) எனப்படும் செயல்முறையை தூண்டுகின்றன. இந்தச் செயல்பாட்டின் மூலம் சர்க்கரை மூலக்கூறுகள், சருமத்தை உறுதியாகவும், இளமையாகவும் வைத்திருக்கும் கொலஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்களுடன் ஒட்டிக்கொள்கின்றன. இதன் விளைவாக தளர்வான, மங்கிய சருமம் மற்றும் சுருக்கங்கள் ஏற்படும். மேலும், இவ்வளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அடிக்கடி அருந்தினால் முகப்பரு போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் பெரும்பாலும் உண்மையான பழத்தை கொண்டு தயாரிக்கப்பட்டவை அல்ல. இவற்றில் சர்க்கரை மற்றும் கெட்டுப்போகாமல் இருக்க சில வகையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இவை காலப்போக்கில் கொலஜன் உற்பத்தியை பாதித்து, அழற்சி ஆகியவற்றை உருவாக்கும்.
மேலும் படிக்க: வேகமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 5 புரதச்சத்து நிறைந்த உணவுகள்
எனர்ஜி டிரிங்க்ஸ் என்று விற்கப்படும் சில வகையான பானங்கள் உங்களுக்கு உடனடி ஆற்றலை அளிக்கலாம். ஆனால், இவற்றில் அதிகப்படியான காஃபின், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் செயற்கை பொருட்கள் நிரம்பியுள்ளன. அதிக சர்க்கரை உங்கள் இன்சுலின் அளவை அதிகரித்து, அழற்சி மற்றும் முகப்பருவை ஏற்படுத்தும். மேலும், காஃபின் அளவு அதிகமாக இருப்பதால், அது உங்கள் சருமத்தை உள்ளிருந்தே வறண்டு போகச் செய்கிறது. சில எனர்ஜி பானங்களில் அதிக சோடியம் உள்ளது. இவை அனைத்தும் உங்களை கடுமையாக பாதிக்கக் கூடியவை.

நம்மில் பலர் அதிகமாக தேநீர் அருந்துகிறோம். ஆனால், அளவுக்கு அதிகமாக தேநீர் அருந்தும் போது சில சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக, அதிக நேரம் கொதிக்க வைக்கப்படும் தேநீரை அதிக சர்க்கரை மற்றும் பாலுடன் அருந்தும் சருமத்தில் நீர்ச்சத்து குறையும் வாய்ப்பு உள்ளது. இதனால் தேநீர் அருந்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.
இவை அனைத்தையும் அடிக்கடி அல்லது அளவுக்கு அதிகமாக அருந்தும் போது உங்கள் சருமம் பாதிக்கப்படுகிறது. எனவே, இவற்றை எடுத்துக் கொண்டால் கட்டுப்பாட்டுடன் இருத்தல் அவசியம் ஆகும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com