image

தலையும் வாலும் புரியாத மெட்ராஸ்காரன் திரைப்பட விமர்சனம்

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள மெட்ராஸ்காரன் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். பொங்கல் பண்டிகையையொட்டி மெட்ராஸ்காரன் படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியானது.
Editorial
Updated:- 2025-01-13, 22:07 IST

பொங்கல் பண்டிகையையொட்டி டஜன் கணக்கில் தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 10ஆம் தேதி பாலாவின் வணங்கான், மெட்ராஸ்காரன் திரைப்படங்கள் வெளியாகின. 12ஆம் தேதி சுந்தர்.சி இயக்கத்தில் மத கத ராஜா வெளியாகியுள்ளது. இந்த பதிவில் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஷேன் நிகாம், நிஹாரிகா, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் நடித்துள்ள மெட்ராஸ்காரன் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

மெட்ராஸ்காரன் கதைச் சுருக்கம்

எதிர்பாராமல் நிகழும் விபத்தில் வயிற்றில் வளரும் குழந்தை இறந்துவிடுகிறது. இதற்காக ஹீரோ சிறை செல்கிறார். 2 வருடங்கள் கழித்து வெளியே வரும் அவருக்கு குழந்தையின் உயிரிழப்புக்கு விபத்து காரணமில்லை என்று தெரிய வருகிறது. உண்மை குற்றவாளி யார் ? தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு ஹீரோ எப்படி பழிவாங்கினார் ? என்பதே மெட்ராஸ்காரன்.

மெட்ராஸ்காரன் விமர்சனம்

புதுக்கோட்டையை சேர்ந்த ஹீரோ ஷேன் நிகாம் சென்னையில் கஷ்டப்பட்டு படித்து நல்ல கம்பெனியில் வேலை பார்க்கிறார். காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்கு ஊரில் ஏற்பாடுகளை செய்கிறார். திருமணத்திற்கு முந்தைய நாள் ஹீரோ எதிர்பாராதவிதமாக கலையரசனின் மனைவி மீது காரை மோதிவிடுகிறார். இதற்காக 2 வருட சிறை தண்டனையும் அனுபவிக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் காதலி, தந்தை, வேலை, சொத்துகளை இழந்து ஹீரோ தனிமரமாக நிற்கிறார். அப்போது குழந்தை இறப்புக்கு தான் காரணமில்லை என்பதை நர்ஸ் மூலம் தெரிந்து கொண்டு நியாயம் கேட்க ஊருக்கு செல்கிறார். முதல் பாதி ஆமை வேகத்திலும், இரண்டாம் பாதி நத்தை வேகத்திலும் நகர்கிறது.

மெட்ராஸ்காரன் படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • கலையரசன், கருணாஸ், நிஹாரிகா, கீதா கைலாசம் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.
  • சாலையில் சாமானியன் ஒருவன் விபத்து ஏற்படுத்தினால் சந்திக்க நேரிடும் பிரச்னைகளை சரியாக காட்சிப்படுத்தி இருந்தனர்.
  • பிற காட்சிகளின் தொய்வால் சண்டை காட்சிகள் ரசிக்கும்படி தெரிந்தன.

மேலும் படிங்க  Vanangaan Review : இயக்குநர் பாலா சாதித்தாரா ? மீண்டும் சோதித்தாரா ?

மெட்ராஸ்காரன் படத்தின் நெகட்டிவ்ஸ்

  • காட்சிகளுக்கு தேவையானதை விட சற்று அதிகமாக நடித்துள்ளார் ஷேன் நிகம். இவருடைய கதாபாத்திரத்தின் மீது எந்த பரிதாபமும் வரவில்லை.
  • குழந்தை இறப்புக்கு யார் காரணம் என்பதை அறிய சமந்தமே இல்லாமல் ஆணவ கொலை, அரசியல் பழிவாங்கல் என இடைவேளைக்கு பிறகு கதை வேறு எங்கோ நகர்கிறது.
  • பாடல்களும் படத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
  • ஒரு கட்டத்திற்கு மேல் இந்த படத்தின் கதை என்ன ? எதை சொல்ல முயற்சிக்கின்றனர் ? போன்ற கேள்விகள் ரசிகர்களுக்கு எழுகிறது.
  • கிளைமேக்ஸில் குழந்தையின் இறப்புக்கு சொல்லப்படும் விளக்கம் துளியும் நம்பும்படி இல்லை.
  • அய்யப்பனும் கோஷியும், மாநகரம் போல படம் எடுக்க முயற்சி அதில் முற்றிலுமாக தோற்றுள்ளனர்.

மெட்ராஸ்காரன் ரேட்டிங் - 2.25/5

படத்திற்கு ஏன் மெட்ராஸ்காரன் என்ற தலைப்பு வைத்தனர் ? படம் முழுவதும் புதுக்கோட்டையில் எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டைக்காரன் என்றே வைத்திருக்கலாம். தலையும் வாலும் புரியாத படத்தில் தலைப்பு மட்டுமா பிரச்னை ?

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com