herzindagi
image

கிங்ஸ்டன் விமர்சனம் : ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதியின் புதையல் வேட்டை எப்படி இருக்கு ?

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி நடிப்பில் வெளிவந்துள்ள கிங்ஸ்டன் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். நடிகராக கிங்ஸ்டன் படம் ஜி.வி.பிரகாஷிற்கு 25வது படமாகும்.
Editorial
Updated:- 2025-03-10, 20:18 IST

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் மார்ச் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சேட்டன், இளங்கோ குமரவேல், அழகம் பெருமாள், சபுமோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பேன் இந்தியா ரிலீஸ் அளவிற்கு தனது 25வது படத்தை ப்ரோமோஷன் செய்தார். அந்த அளவிற்கு கிங்ஸ்டன் மதிப்புடையதா ? வாருங்கள் விமர்சனத்தை பார்க்கலாம்.

கிங்ஸ்டன் கதைச் சுருக்கம்

கொடிய சாபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட கிராம மீனவர்கள் யார் கடலுக்கு சென்றாலும் உயிரிழந்துவிடுகின்றனர். இந்த கட்டுக்கதைக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என ஹீரோ கடலுக்கு செல்கிறார். அங்கு பல மர்மங்கள் காத்திருக்கின்றன. ஹீரோ அதிலிருந்து தப்பித்து கரை திரும்பினாரா என்பதே கிங்ஸ்டன்.

கிங்ஸ்டன் விமர்சனம்

ஊருக்குள் ரவுடியாக சுற்றும் ஜி.வி.பிரகாஷ் சபுமோனிடம் வேலை செய்கிறார். கடல் அட்டைகளை கடத்துவது அவருடைய வேலை. கடலுக்குள் சென்ற தனது தந்தை எப்படி உயிரிழந்தார் என்பதை கண்டறிய ஜி.வி.பிரகாஷிடம் சேர்ந்து கடலுக்குள் செல்லும் இளைஞர் உயிரிழக்கின்றான். இதனால் மனம் திருந்தும் .வி.பிரகாஷ் கடலுக்குள் செல்லக் கூடாது என்பதற்கான கட்டுக்கதையை முடியறிக்க விரும்புகிறார். நண்பர்களுடன் சேர்ந்து கடலுக்குள் செல்கிறார். அடுத்தடுத்த ட்விஸ்ட் அவருக்கு காத்திருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் ? அவர் கரை திரும்பினாரா ? இல்லையா ? என்பதை 2.15 மணி நேர படமாக சொல்லியுள்ளனர். 

கிங்கஸ்டன் படத்தின் நெகட்டிவ்ஸ்

  • எந்த ஒரு கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படவில்லை. கதை ஆரம்பிக்கும் விதம் இடைவேளை, இறுதிக்காட்சி மூன்றும் வேறாக இருக்கிறது.
  • தொடக்கத்தில் ஒரு பிளாஷ்பேக் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு தற்காலத்தில் பயணிக்கின்றனர். எதாவது ஒரு பிரச்னையை காட்டிவிட்டு மீண்டும் பிளாஷ்பேக் செல்கின்றனர். 
  • பிளாஷ்பேக்கிலும், நிஜத்திலும் யார் எந்த கதாபாத்திரம் என்றே தெரியவில்லை. ஊருக்கான சாபம் என தொடங்கி, பேய் கதை, ஜாம்பி கதை, தங்க புதையல் கதை, அமானுஷ்ய கதையென ஒட்டுமொத்த திரைக்கதையும் சொதப்பல்.
  • இந்த படத்தில் சேட்டன், அழகம் பெருமாள் கதாபாத்திரங்கள் மட்டுமே முக்கியமானவை. மற்ற கதாபாத்திரங்கள் யாரை நீக்கி இருந்தாலும் படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது. 
  • தூத்துக்குடி பாஷையில் ஆரம்பித்து அதன் பிறகு மீன்வர்களுக்கான அடையாள மொழியை கூட தொடரவில்லை. 
  • இரண்டாம் பாதி முழுக்க கிராஃபிக்ஸ் காட்சிகள். கூடுதல் கவனம் செலுத்தி ரிபீட் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். 

ரேட்டிங் - 1.5 / 5 

மேலும் படிங்க  ஜெயிலர் 2 சூட்டிங் முதல் நடிகை அபிநயா நிச்சயதார்த்தம் வரை; இந்த வார சினிமா அப்டேட்ஸ்  

இந்த படத்தில் பாஸிட்டிவ்ஸ் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. தனது பெயரை நிரூபிப்பதற்காக மக்களுக்கு புரியாத படி இயக்குநர் படத்தை எடுத்துள்ளனர் என்றே சொல்லலாம். தேவாரா படத்தை பார்த்து கிங்ஸ்டனை படத்தை எடுக்க இயக்குநர் முயன்றாரா எனத் தெரியவில்லை.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com