பிடிச்சத செஞ்சா சூப்பர்ஸ்டார் ஆகலாம்! நயன்தாராவின் டைமிங் பஞ்ச்

மாயா, அறம், கோலமாவு கோகிலா படங்களை தொடர்ந்து பெண் கதாபாத்திரத்தை மையாக கொண்ட அன்னபூரணி படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். வரும் 1ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

Main ap

லேடி சூப்பர்ஸ்டார் என தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட படத்தில் நடித்துள்ளார். அறம் படத்தில் கம்பீரமான ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டு மழையில் நனைந்த நயன்தாரா அடுத்தடுத்த படங்களுக்கும் ஆதே ரூட்டை பின்பற்றினார்.

ஆனால் கோலமாவு கோகிலா படத்தைத் தவிர ஐரா, கொலையுதிர் காலம், கனெக்ட் ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. நெற்றிக்கண், ஓ2 படங்கள் ஓரளவு ஓடின. கமர்ஷியல் டச்சிற்காக அஜித், விஜய், விஜய் சேதுபதி, ஷாருக்கானுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்ததால் அவர் பழைய ரூட்டிற்கே மாறிவிட்டதாக ரசிகர்கள் நினைத்தனர்.

இந்த நிலையில் புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் அன்னபூரணி படத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் ராஜா ராணி காம்போவை நினைவூட்டுகிறது. ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லீ, கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகை ரேணுகா உட்பட பலர் நடித்துள்ளனர்.

 ap

பிராமணப் பெண்ணான நயன்தாரா தனது குடும்பத்திடம் எம்பிஏ படிப்பதாக ஏமாற்றி விட்டு சமையல் கலைஞராகும் முயற்சிகளை மேற்கொள்வது போல் படத்தின் டிரெய்லர் உள்ளது. இதற்கு சத்யராஜ், ஜெய் உதவுவது போன்ற காட்சிகளும் டிரெய்லரில் இருக்கின்றன.

மேலும் படிங்கஇந்தி மொழியா ? தமிழ் மொழியா ? நச்சுனு பதிலளித்த விஜய் சேதுபதி

 ap

பல சவால்களை எதிர்கொண்டு நயன்தாரா சமையல் கலைஞராக உருவானாரா என்பதே படத்தின் ஒன் லைனாக தெரிகிறது. படத்தின் டிரெய்லரை சுமார் 44 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இப்படம் வரும் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் டிரெய்லர் நடிகர் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் சாயலில் உள்ளது. தனது முந்தைய படத்தில் மாஸான கதாபாத்திரம் என நினைத்து மணி ஹெய்ஸ்ட் தொடரின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான காவல் அதிகாரி ரஃகேல் கதாபாத்திரத்தை அச்சு அசலாகக் காப்பி அடித்து கிரிஞ்ச் செய்த நயன்தாரா இப்படத்தில் அந்தத் தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP