herzindagi
image

தேன் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா? வல்லுநர்கள் கூறும் விளக்கம்

தேன் எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. இந்த கேள்விக்கான விளக்கத்தை மருத்துவர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.
Editorial
Updated:- 2025-09-10, 15:19 IST

நீரிழிவு நோயாளிகள் வெள்ளை சர்க்கரை சாப்பிடக் கூடாது என்று பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இவை இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கின்றன. இதனால், பலரும் தற்போது தேன் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர். இவ்வாறு தேன் சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்ற சந்தேகமும் நிறைய பேருக்கு இருக்கிறது. இதற்கான விளக்கத்தை மருத்துவர் அருணாசலம் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: குடல் இயக்கத்தை சீராக்கும்; நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்; இந்த மழைக்காலத்தில் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

 

தேனில் இருக்கும் மூலக்கூறுகள்:

 

தேனில், குளூகோஸ் (Glucose) மற்றும் ஃப்ரக்டோஸ் (Fructose) என்ற இரண்டு மூலக்கூறுகள் உள்ளன. இந்த குளூகோஸை, இன்சுலின் ஆற்றலாக மாற்றும். அவ்வாறு ஆற்றலாக மாற்ற முடியவில்லை என்றால் இந்த குளூகோஸ் அளவு அதிகரித்து சர்க்கரை நோயாக மாற்றமடைகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். தேனில், குளூகோஸ் இருப்பதனால் இரத்த சர்க்கரை அளவு கூடுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

Sugar

 

ஆனால், அதில் சிறிய மாற்றம் உள்ளது. ஒரு பொருளை நாம் சாப்பிடும் போது அது எந்த அளவிற்கு வேகமாக சர்க்கரையை உச்சத்திற்கு கொண்டு வருகிறது என்பதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்று கூறுவார்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகளான கீரை, வெண்டைக்காய், பழங்கள் போன்றவற்றில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருக்கும். இவை சர்க்கரையை நிதானமாக அதிகரித்து, நிதானமாக குறைக்கும்.

 

வெள்ளை சர்க்கரை சேர்த்து தேநீர், காபி அருந்துதல், ஐஸ் கிரீம், சாக்லேட், மில்க் ஸ்வீட்ஸ் சாப்பிடுவது போன்றவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக வேகமாக அதிகரிக்கும். இது உடலில் சர்க்கரை நோயின் தாக்கத்தை அதிகரிக்கிறது. இந்த சூழலில் தேனின் கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பது 58 எனக் கருதப்படுகிறது. இது ஓரளவிற்கு மிதமான கிளைசெமிக் இண்டெக்ஸ் என்று எடுத்துக் கொள்ளலாம்.

 

தேன் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்பதற்கான வல்லுநர் விளக்கம்

மேலும் படிக்க: முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? மருத்துவர் சொல்லும் உண்மை

 

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?

 

ஆனால், இதில் குளூகோஸ் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதனை எடுத்துக் கொள்வது நல்லது அல்ல என்று பலரும் கூறுகின்றனர். எனினும், குளூகோஸை கிளைகோஜனாக மாற்றி சர்க்கரை அளவை குறைக்கும் பணியை ஃப்ரக்டோஸ் செய்கிறது என்று மருத்துவர் அருணாசலம் கூறுகிறார். அப்படி பார்க்கும் போது ஃப்ரக்டோஸும் தேனில் இருக்கிறது. எனவே, யாரெல்லாம் தேன் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவது மிக முக்கியம் ஆகும்.

Honey uses

 

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வெள்ளை சர்க்கரையை குறைத்துக் கொண்டு தேனை பயன்படுத்த தொடங்கினால் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் மிக அரிதாக வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேன் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், சர்க்கரை நோய் தீவிரமாக இருப்பவர்கள் தேன் எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com