சித்தாரே ஜமீன் பர் விமர்சனம் : பெரிய மனதிருந்தால் குறையின்றி சந்தோஷமாக வாழலாம்

ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் அமீர் கான் நடித்துள்ள சித்தாரே ஜமீன் பர் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகாது என அமீர் கான் கூறியிருப்பதால் திரையரங்குகளில் ஓடும் போதே தவறமால பார்த்துவிடுங்கள்.
image
image

ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் அமீர் கான் நடித்து ஜூன் 20ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் சித்தாரே ஜமீன் பர். இது 2018ல் வெளியான சாம்பியன்ஸ் என்ற ஸ்பானிஷ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். சாம்பியன்ஸ் படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். 1999ல் இருந்து 2014 வரை அடிரெஸ் என்ற அணி 12 முறை கூடைப்பந்து விளையாட்டில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. அடிரெஸ் அணியில் விளையாடிய வீரர்கள் மனநலன் பாதிக்கப்பட்டவர்கள். ஆஸ்கர் விருதுக்கு சாம்பியன்ஸ் படம் ஸ்பெயின் அரசாங்கம் சார்பாக பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

சித்தாரே ஜமீன் பர் கதைச் சுருக்கம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் கூடைப்பந்து பயிற்சியாளர் அமீர் கானுக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பயிற்சி அளிக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. அமீர் கானும் அதை ஏற்று பயிற்சி அளிக்க செல்கிறார். அங்கு அவர் எந்த மாதிரியான சிக்கல்களை எதிர்கொண்டு அணியை போட்டிக்கு தயார்படுத்துகிறார் என்பதே சித்தாரே ஜமீன் பர்.

சித்தாரே ஜமீன் பர் விமர்சனம்

கூடைப்பந்து பயிற்சியாளர் அமீர் கான் யாரை பற்றியும் சிந்திக்காமல் தனக்கு பிடித்தபடி வாழ நினைக்கிறார். இதற்காக மனைவி ஜெனீலியாவையும் பிரிந்துவிடுகிறார். வீட்டில் தாய் பேச்சையும் கேட்பதற்கு அமீர் கான் தயாராக இல்லை. இந்த நிலையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கூடைப்பந்து பயிற்சி அளிக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. அங்கு சென்றால் பல சவால்களும், சிக்கல்களும் காத்திருக்கின்றன. இவற்றை மீறி அமீர் கான் எப்படி அணியை தயார்படுத்துகிறார் என ரீமேக்கில் சிறிதும் பிசிறு தட்டாமல் படம் எடுத்துள்ளனர்.

சித்தாரே ஜமீர் பர் பாஸிடிவ்ஸ்

  • படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நடிக்க வைத்ததற்காக இயக்குநரையும், அமீர் கானையும் பாராட்ட வேண்டும். பண்டூ, சர்மா ஜி, ராஜு, சுனில், கரீம், கோலு கான், லோட்டஸ் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் மனதில் நிற்கின்றன.
  • தொய்வான காட்சிகளின்றி படத்தை கலகலப்பாக ஜனரஞ்சகமாக எடுத்துச் சென்றுள்ளனர்.
  • அமீர் கானின் கதாபாத்திர வடிவமைப்பு மிக சிறப்பு. பார்ப்பதற்கு 35 வயது நபர் போல் துடிப்புடன் நடித்திருக்கிறார்.
  • ஜெனீலியா, குர்பல் சிங், டோலி, தீப்ராஜ் ராணா எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
  • மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீது பரிதாபம் காட்டி அழவைக்காமல் அவர்களுடைய நேர்மறையான எண்ணங்கள், மகிழ்ச்சியான தருணங்களை காண்பித்தது ரசனைக்குரியவை.

சித்தாரே ஜமீன் பர் ரேட்டிங் - 3.5 / 5

நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படைப்பை அமீர் கான் இந்திய சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். தவறாமல் பார்த்து ரசிக்கவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP