தென்னிந்திய நடிகைகள் பலரும் ஹிந்தியில் படங்கள் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷும் ஹிந்தியில் அறிமுகமாக இருக்கிறார்.ஆம். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறாராம். இதில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.இந்த படத்திற்கு இரண்டு கதாநாயகிகள் தேவைப்படும் என்பதால் இருவருமே நடிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
இந்த படத்தின் இந்தியில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் வருண் தவான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வருண் தவான், ஜான்வி கபூர் ஏற்கனவே ஜோடி சேர்ந்து பவால் என்ற படத்தில் நடித்திருக்கின்றனர்.ஆனால் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் நடிப்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த பதிவும் உதவலாம் : பிளாக் அவுட் ஃபிட்டில் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி! கலக்கல் போட்டோஸ்
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து பாராட்டுகளை பெற்றார் .தற்போது சைரன், கண்ணி வெடி , ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com