தங்கத்தை வாங்குவது ஆடம்பரம் இல்லை. சேமிப்பின் மூலதனம் என்பது ஆணித்தனமாக உணர்த்தி வருகிறது ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டிருக்கும் தங்கத்தின் விலை. குறிப்பாக சமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வரக்கூடிய தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10600 ஐ எட்டிய நிலையில் நேற்றைய தினமும் கிராமிற்கு ரூபாய் 720 குறைந்தது. இதன் படி ஒரு கிராம் 10, 510 ஆக இருந்தது. ஒரு பவுன் ரூபாய் 84,080 க்கு விற்பனையானது. இந்நிலையில் எப்படியாவது இந்த வார இறுதியில் கொஞ்சம் சேமிப்புத் தொகையை வைத்து நகைகள் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது இன்றைய தங்கத்தின் விலை. ஆம் கடந்த 2 நாட்களாக கொஞ்சம் தங்கத்தின் விலை சரிவைக் கண்ட நிலையில் மீண்டும் உயர்ந்து விட்டது. அப்படி உயர்ந்தது? ஏன் தங்கத்தின் விலையானது மாறி மாறி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை ; மகிழ்ச்சியில் நகைப் பிரியர்கள்!
இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூபாய் 40 உயந்து, ஒரு கிராமானது ரூபாய் 10550 விற்பனை செய்யப்படுகிறது. இதன் படி ஒரு பவுனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூபாய் 84400க்கு விற்பனையாகிறது. வார இறுதியில் ஏற்பட்ட இந்த விலை உயர்வானது பெண்கள் மற்றும் நகைப்பிரியர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை உயர்ந்ததால் பெண்கள் தங்கம் மோல்டு பூசிய வெள்ளி நகைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் இன்றைய நிலவரப்படி தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாகவே ரூ.3க்கு விற்பனையாகி வந்தது. அதுவே இன்றைக்கு ரூபாய் 3 உயர்ந்து ரூபாய் 153க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்க விலையில் தொடர் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்க டாலருக்க நிகரான ரூபாய் மதிப்பு விழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88. 70 ஆக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் படிக்க: மகளிர் தினத்திற்கு நீங்கள் அணியக்கூடிய ஆடைகளுக்கு பொருந்தக்கூடிய லேட்டஸ்ட் தங்க காதணி டிசைன்கள்
அந்த வகையில், தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.70 ஆக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. பங்குச் சந்தையிலும் மீண்டும் தடுமாற்றம் நிலவுவதால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, ஆபரணத் தங்கம் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com