மாட்டு பொங்கல் கொண்டாட்டத்திலும் கோலம் போடுவது முக்கியமானது. வீட்டு வாசலையும், தொழுவத்தையும் நன்கு சுத்தப்படுத்தி மாட்டுப் பொங்கல் கோலமிட்டு அழகுப்படுத்துங்கள். மாட்டு பொங்கலுக்கு பலரும் மாடு வரைவது மிகவும் கடினமான காரியமாக நினைக்கின்றனர். பலரும் பானை நன்றாக வரைந்துவிட்டு மாட்டு முகத்தையும், மாட்டின் உடலையும் சொத்தபலாக கோலமிடுவார்கள். கோலமிட்ட பிறகு மாடு வேறு ஏதோ உயிரினம் போல் காட்சியளிக்கும். அந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இந்த பதிவில் இரண்டு எளிதான மாட்டுப் பொங்கல் கோலங்கள் பகிரப்பட்டுள்ளன.
மாட்டு பொங்கல் கோலங்கள்
மாட்டு பொங்கல் 4*9 புள்ளி கோலம்
- இது ஒரு 4*9 புள்ளி மாட்டு பொங்கல் கோலம், அதாவது 4 வரிசை மற்றும் 9 நெடுவரிசைகளில் புள்ளிகள் கொண்டு போடப்படும் மாட்டு பொங்கல் கோலம்.
- மாட்டின் முகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். முதல் வரிசையின் 4,5வது நெடுவரிசை புள்ளிகளில் தொடங்கி இரண்டாவது வரிசையின் 4,5வது நெடுவரிசை புள்ளிகளை கடந்து மாட்டு முகத்தை கோலமிடுங்கள்.
- முதல் வரிசையின் 5வது நெடுவரிசையில் ஆரம்பித்து 8வது நெடுவரிசை வரை இழுத்து ஒரு அலை போல மாட்டின் திமில், முதுகு பகுதி இருக்கட்டும்.
- அதற்கு அடுத்து 2வது வரிசையின் 9வது நெடுவரிசை புள்ளியில் இருந்து கீழே இழுத்து மாட்டின் கால் பகுதிகளை கோலமிடுங்கள். சந்தேகம் வந்தால் புகைப்படங்களை பார்த்து கோலமிடுங்கள்.
- இப்போது 2வது வரிசையின் 2வது நெடுவரிசைக்கு முன்பு தொடங்கி ஒரு சிறிய பானை கோலமிடுங்கள்.
- கீழே செங்கல், எரி கட்டை இருப்பது போல் வரையவும். பானையில் பொங்கல் பொங்கட்டும்.
- மாட்டின் உடல் பகுதிக்குள் இருக்கும் புள்ளிகளை ஒரு அலங்கார சால்வை வடிவில் இணைத்து உள்ளே பூ வரையவும்.
- மீதமுள்ள முதல் வரிசை, இரண்டாவது வரிசை புள்ளிகளை இணைத்து செங்கரும்பு கோலமிடுங்கள்.
- முதல் வரிசையின் 9வது நெடுவரிசை புள்ளி மீதம் இருக்கும். அதில் சூரியன் வரையுங்கள்.
- உள்ளே உங்களுக்கு பிடித்தமான நிறங்களில் வண்ணம் பூசினால் சூப்பரான மாட்டுப் பொங்கல் கோலத்தால் வீட்டு வாசல் ஜொலிக்கும்.
மேலும் படிங்கபொங்கலுக்கு வீட்டு வாசலில் போட அழகான பானை கோலங்கள்; 4*6 புள்ளியில்
மாட்டு பொங்கல் 3*4 புள்ளி கோலம்
- முதலில் 3 வரிசை 4 நெடுவரிசைகளுக்கு புள்ளி வைக்கவும். அடுத்தாக 1-2 நெடுவரிசை இடையில் தொடங்கி மாட்டின் தலையை வரையுங்கள்.
- முதல் நெடுவரிசை மற்றும் நெடுவரிசைக்கு இடையில் ஆரம்பித்த மாட்டின் தலையிலிருந்து இடது புறம் ஒரு கொம்பும், அதே போல 3வது நெடுவரிசை மற்றும் நெடுவரிசைக்கு இடையில் முடிக்கப்பட்ட இடத்திலிருந்து வலது புறம் ஒரு கொம்பு வரையவும்.
- புகைப்படத்தில் குறிப்பிட்டு இருப்பதை போல மாட்டின் முகம், வாயை நிறைவு செய்யுங்கள்.
- 2வது வரிசையின் 2வது நெடுவரிசை புள்ளியின் இடது புறம், வலது புறத்தில் கண்கள் வரையவும். மேலே ஒரு பெருமாள் நாமம் போடுங்கள்.
- 2,3,4 வரிசைகளில் மீதம் இருக்கும் புள்ளிகளை இணைத்து மாலை வடிவில் கோலமிடவும். அதன் பிறகு வண்ணங்களால் நிரப்பலாம்.
- மிகவும் எளிதான 3*4 மாட்டு பொங்கல் கோலத்தை வீட்டு வாசலில் போட்டு மகிழுங்கள்.


வாசலில் கோலமிடும் முன்பாக இவை இரண்டையும் ஒரு நோட் புத்தக்கத்தில் வரைந்து பாருங்கள். வேலை சுலபமாகும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation