தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அன்று வீட்டு வாசலை சுத்தப்படுத்தி தண்ணீர் தெளித்து அழகான கோலம் போடுவது முக்கியத்துவம் பெறுகிறது. கோலம் போடுதல் தமிழர்களின் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றாகும். இது தர்மத்தையும் குறிக்கிறது. கண்ணுக்கு தெரியாத பல ஜீவ ராசிகள் அரசி மாவில் போடப்படும் கோலத்தை சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன. பொங்கல் கோலம் என்றால் மிகப்பெரிதாக இருக்குமே; குறைந்தது ஒரு மணி நேரம் எடுக்கும் என நினைக்காதீர்கள். இந்த பதிவில் 4*6 புள்ளியில் பொங்கல் பானை கோலமிடுவது எப்படி என பார்க்கலாம். 4*6 வரிசையில் பொங்கல் பானை கோலம் மற்றும் எளிதான பானை கோலமிடுதல் உங்களுக்காக....
4*6 பொங்கல் பானை கோலம்
- முதலில் 4 வரிசை மற்றும் 6 நெடுவரிசையில் புள்ளிகள் வைக்கவும். இதில் முதல் வரிசையின் 3,4வது நெடுவரிசை மற்றும் நான்காவது வரிசையின் 3,4வது நெடுவரிசையை இணைக்கும் வகையில் படிப்படியாக பானை வரையவும்.
- பானையை நிறைவு செய்த பிறகு பொங்கல் பொங்கி வருவது போல வரையுங்கள். இப்போது பானைக்குள் உங்களுக்கு பிடித்தமான நிறங்களால் நிரப்பவும்.
- அடுத்ததாக பானையின் 2வது, 3வது வரிசைகளின் 3வது, 4வது நெடுவரிசைகளை இணைக்கும் வகையில் x போடுங்கள்.
- பானையின் மேல் புறத்தில் மூன்று இலை வரையவும்.
- இப்போது வெளியே உள்ள புள்ளிகளில் இடது பக்கம் ஒரு கரும்பும், வலது பக்கம் ஒரு கரும்பும் கோலமிடவும்.
- பொங்கல் பானையின் மேலே சூரியன் வரைந்து மஞ்சள் நிறத்தால் நிரப்புங்கள்.
- கீழே இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் எழுதினால் 4*6 புள்ளியில் சூப்பரான பொங்கல் கோலம் வீட்டை அலங்கரிக்கும்.
பொங்கல் பானை கோலம் 2
- இந்த பானை கோலம் மிக மிக எளிதானது. மொத்தமே 4 வரிசைகள் தான். முதல் மற்றும் நான்காவது வரிசையில் இரண்டு புள்ளிகளும், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் நான்கு புள்ளிகளும் இருக்கும்.
- புள்ளிளை இணைத்து அப்படியே ஒரு பானை வரைந்தால் கோலம் முடிந்துவிடும். வழக்கம் போல மேலே பொங்கல் பொங்குவது போல் வரையவும்.
- பானையின் மேல் விளக்கின் சுடல் போல் கோலமிடுங்கள். உள்ளே வண்ணங்களால் நிரப்பி இனிய பொங்கல் 2025 என எழுதுங்கள் பொங்கல் பானை கோலம் நிறைவுபெறும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation