மாடியில் கத்திரிக்காய் விளைச்சல் காண்பதற்கு விதைப்பு முதல் அறுவடை வரை; முழு தகவல்

மாடித் தோட்டத்தில் கத்திரிக் காய் செடி வளர்ப்பது எப்படி ? கத்திரிக் காய் செடியில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் என்ன செய்வது ? கத்திரிக் காய் விதை முதல் அறுவடை  வரை மொத்த விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
image

சமையலில் வெங்காயம், தக்காளிக்கு அடுத்தபடியாக நாம் அதிகம் பயன்படுத்துவது கத்திரிக்காய். சாம்பாரில் கத்திரிக்காய், அவியலில் கத்திரிக்காய், புளி குழம்பில் கத்திரிக்காய், தொக்கிற்கு கத்திரிக்காய், பிரியாணிக்கு எண்ணெய் கத்திரிக்காய் என பல உணவுகளில் கத்திரிக்காய் பயன்படுத்துகிறோம். முன்பெல்லாம் சந்தைகளில் கத்திரிக்காய் வாங்குவதற்கு ஆளே இருக்காது. கிலோ 5 ரூபாய், 10 ரூபாய்க்கும் கிடைக்கும். இப்போது கிலோ கத்திரிக்காய் 40 ரூபாய் - 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கத்திரிக்காயின் நன்மைகள் தெரியாமல் அவற்றை நம் பிள்ளைகள் ஒதுக்கி வைக்கின்றனர். கத்திரிக்காயை மாடித் தோட்டத்தில் வளர்ப்பது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

tips to grow brinjal

மாடித் தோட்டத்தில் கத்திரிக்காய்

கத்திரிக்காய் செடி வளர்ப்பு

  • கத்திரிக்காயை நேரடியாக விதை நடவு செய்து வளர்த்தால் விளைச்சல் அவ்வளவாக கிடைக்காது. நாற்று நடவு செய்து கத்திரிக்காய் வளர்க்க வேண்டும்.
  • நர்சரியில் இருந்து தரமான நாட்டு கத்திரிக்காய் விதைகளை வாங்கவும். செம்மண்ணில் கோகோபீட் கலந்து ஒரு அங்குல ஆழத்தில் கத்திரிக்காய் விதைகளை பரவலாக தூவி விட்டு மூடி தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பிக்கவும்.
  • கொஞ்சம் நிழலான பகுதியிலேயே கத்திரிக்காய் செடி வளரும். 8-10 நாட்களில் விதைத்த விதைகள் முளைக்க ஆரம்பிக்கும்.

கத்திரிக்காய் செடி மண் கலவை

  • விதை முளைத்து 2-3 இலைகள் தென்பட்டவுடன் இதை மண் கலவைக்கு மாற்றலாம்.
  • 20*20 மண் தொட்டியில் 40 விழுக்காடு கோகோபீட், 20 விழுக்காடு மாட்டு எரு, 20 விழுக்காடு மண் புழு உரம், 20 விழுக்காடு செம்மண், கொஞ்சம் சூடோமோனாஸ் கலந்து தண்ணீர் ஊற்றி நாற்று போல் கத்திரிக்காய் செடியை நடவும்.
  • மாலை நேரத்தில் இதை செய்யவும். ஏனெனில் மறுநாளே மண்ணில் வேர் பிடித்து கத்திரிக்காய் செடி வளர ஆரம்பிக்கும்.
  • 15 நாட்களுக்கு ஒரு முறை மீன் அமிலம் தெளிக்கவும். ஒரு லிட்டர் தண்ணீரில் 20 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிக்கவும்.
  • 30 நாட்களில் கத்திரிக்காய் செடி நன்றாக இலை விட்டு வளர்ந்திருக்கும். செடி வளர்வதற்கு துணையாக மூங்கில் குச்சியுடன் கட்டிவிடவும்.
  • 40 நாட்களில் மொட்டு வளரும். அப்போது தேங்காய் - புளித்த மோர் கரைசலை தெளிக்கவும்.
  • ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி தேங்காய் - மோர் கரைசல் கலந்து செடியில் பயன்படுத்தலாம்.

கத்திரிக்காய் செடி பூச்சி தாக்குதல்

  • ஒவ்வொரு முறை தண்ணீர் தெளிக்கும் போது இலைகளை பரிசோதிக்கவும். கத்திரிக்காய் செடி இலைப்பேன், சாறு உறிஞ்சி பூச்சியால் பாதிக்கப்படும்.
  • மாதம் ஒரு முறை வேப்ப புண்ணாடு கரைசல் தெளிக்கவும். இலைகள் நன்கு வளர ஆரம்பித்த பிறகு மண்புழு உரம், காய்கறி உரம் பயன்படுத்துங்கள்.

மேலும் படிங்கவீட்டில் கொத்தமல்லி செடி செழித்து வளர்ப்பதற்கான முறை; வியாபாரமே பண்ணலாம்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP