herzindagi
image

கூந்தல் உதிர்வு பிரச்சனை அதிகமாக இருக்கிறதா? இந்த 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள் இந்த 7 வழிமுறைகளையும் பின்பற்றலாம். இவற்றை பின்பற்றுவதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்தி கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.
Editorial
Updated:- 2025-11-10, 11:21 IST

முடி உதிர்தல் என்பது இன்று பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை ஆகி விட்டது. ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் இரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்துவது போன்றவை முடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களாகும். முடி உதிர்வை தடுக்கவும், அடர்த்தியான கூந்தலை பெறவும் உதவும் ஏழு வழிமுறைகளை தற்போது பார்க்கலாம்.

மேலும் படிக்க: சருமத்தை இயற்கையாக பராமரிக்க உதவும் வெள்ளரிக்காய்; இப்படி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்

 

கற்றாழை:

 

கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துகள் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, பொடுகு தொல்லையை குறைக்கும். மேலும், சரும துளைகளில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, முடி வளர்ச்சியை தூண்டுகிறது. கற்றாழை ஜெல்லை நேரடியாக உச்சந்தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.

Aloevera

 

வெங்காய சாறு:

 

வெங்காய சாறில் சல்பர் (Sulfur) சத்து அதிகமாக உள்ளது. இது கொலஜன் (Collagen) உற்பத்தியை அதிகரித்து, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வெங்காய சாறை உச்சந்தலையில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிப்பதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

 

தேங்காய் எண்ணெய்:

 

தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்தை கொடுக்கிறது. மேலும், இது முடியில் ஏற்படும் புரத இழப்பை குறைத்து, முடி உடைவதை தடுக்கிறது. தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது, தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி, உச்சந்தலையில் மசாஜ் செய்வது நல்லது.

மேலும் படிக்க: தயிர் இருந்தால் போதும் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றலாம்!

 

வெந்தயம்:

 

வெந்தயத்தில் புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் (Nicotinic acid) நிறைந்துள்ளன. இவை முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி அடர்த்தி குறைவதை தடுக்கின்றன. வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அரைத்து ஒரு பேஸ்ட் போல தயாரித்து, உச்சந்தலையில் தடவி வரலாம்.

Fenugreek

 

கிரீன் டீ:

 

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ, முடியின் வேர்க்கால்களைத் தூண்டி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கிரீன் டீயை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பிறகு அதை தலைக்கு பயன்படுத்தலாம். இது கூந்தலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

 

நெல்லிக்காய்:

 

வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காய், இளநரையைத் தடுப்பதோடு, முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை குறைக்கும். நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம் அல்லது நெல்லிக்காய் சாறை தலைக்கு தடவலாம்.

 

வேப்ப இலைகள்:

 

வேப்பிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. மேலும், இது பொடுகு தொல்லையை நீக்கி, முடி உதிர்வை குறைக்கிறது. வேப்பிலையை அரைத்து தலையில் பேக் போல பயன்படுத்தலாம் அல்லது வேப்பிலை கலந்த தண்ணீரால் தலைக்கு குளிக்கலாம்.

 

இந்த குறிப்புகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதுடன், ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலையும் பெறலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com