herzindagi
image

7 புள்ளிகள் கொண்டு எளிமையாகப் போடப்படும் மார்கழி மாத சிக்கு கோலங்கள்

சிக்கு கோலங்களில் நிறைய திருப்பங்கள், வளைவுகள் இருக்கும், பல சிக்கலான வடிவமைப்புகள் இந்த கோலத்தில் இருப்பதால் 7 புள்ளிகள் கொண்ட எளிமையான கோலங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-12-29, 08:55 IST

சிக்கு கோலம் என்பது தமிழ்நாட்டின் கோலம் வடிவமைப்புகளுக்குத் தனித்துவமானது. சிக்கு கோலம் என்பது பல வகையான முடிச்சுகளை ஒன்றாக இனைத்து ஒரு கோலமாக வடிவமைப்பதாகும். சிக்கு கோலம் பார்க்க அழகாக இருந்தாலும், இதன் சிக்கல்களைக் கண்டுபிடிப்பது, முளைக்கு வேலை கொடுக்கும் ஒரு சிறந்த விளையாட்டாக இருக்கும்.  உண்மையில் இதுஸ்ச்வ்  மிகவும் எளியது, ஆனால் பார்க்க மிகவும் சிக்கலானதாக இருக்கும் இந்த வகை கோலத்தைக் கண்டுபிடிப்பது மூளைக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். எந்த திசையிலிருந்து பார்க்கும்போது இறுதி வடிவமைப்பு கடைசி வரைக்கும் நமது கண்களுக்கு தென்படாது.  புள்ளிகள் வைத்து புள்ளிகள் மேல் போடப்படும் கோலம் இயல்பானது, ஆனால் புள்ளிகள் வைத்து புள்ளிகளைச் சுற்றி போடப்படும் கோலம் சிக்கு கோலத்தை குறிக்கிறது. சிக்கு கோலம் போட விரும்பும் மக்களுக்கு, எளிமையாக 7 புள்ளி வைத்து போடப்படும் சில கோலங்களைப் பார்க்கலாம். 

 

மேலும் படிக்க: 21 புள்ளிகள் வைத்து 4 வகையான மார்கழி மாத கோலங்கள்

7 புள்ளி சிக்கு கோலம்

 

தனித்தும் பெற்ற சிக்கு கோலத்தை போட நேர்த்தியான அழகு வேண்டும். அனைவரையும் கவரும் விதமாக இந்த கோலங்கள் இருக்கும், கோலம் போட ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் நபர்களுக்கு இந்த கோலம் எளிமையாக இருக்கும்.

 

7 புள்ளிகள் கொண்ட 1 புள்ளியில் முடிக்கும் சிக்கு கோலம்

 

இந்த எளிமையான சிக்கு கோலம், மையப்பகுதியில் 7 புள்ளிகளில் தொடங்கி, அடுத்தகட்டமாக 5 புள்ளிகளை இரண்டு முறை இட்டு, 5 புள்ளிகளுக்கு மத்திய இருக்கும் புள்ளியைக் கொண்டு ஒற்றை புள்ளியில் முடிக்க வேண்டும். இந்த கோலத்தை எந்த திசையில் தொடங்க வேண்டும் என்பது உங்களை பொறுத்தது. தொடக்க புள்ளியில் கோலத்தின் நிறைவு கம்பியை முடிக்கலாம். இரண்டு முறை முயற்சித்தாலே இந்த கோலத்தை அதிகாலை மார்கழி மாத பனியில் அழகாக போடலாம்.

7 dots sikku kolam

Image Credit: pinterest


7 புள்ளியில் தொடங்கி 4 புள்ளியில் முடியும் சிக்கு கோலம்

 

மையப்பகுதியில் 7 புள்ளிகளில் தொடங்கி, அடுத்தகட்டமாக இடுக்கு புள்ளியாக ஆறு, ஐந்து என நங்கு புள்ளியில் முடிக்கவும். இந்த சிக்கு கோலம் தொடங்குவதும், முடிப்பதும் சற்றி கடினமாக இருக்கும். ஆனால், இரண்டுக்கு மூன்று முறை சற்று உற்று பார்த்தால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும், நங்கு திசையிலும் இருக்கும் வளைவுகள் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம், ஒரு முறை உங்கள் புத்தகத்தில் வரைந்து பார்த்தால் உங்களுக்கு தெளிவு கிடைக்கும்.

yellow nail (1)

Image Credit: pinterest

7 புள்ளிகளில் தொடங்கு வளைவு சிக்கு கோலம்

 

7 புள்ளிகளில் தொடங்கி 4 புள்ளிகளில் முடியும் இந்த கோலம், முன்னும் பின்னும் வளைவுகளைக் கொண்டு பல சிக்கல்களைக் கொண்ட கோலமாகும். இந்த கோலம் வடிவமைப்பைக் கொண்டது. கோலம் தெரியாமல் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள் இந்த கோலத்தை பயிற்சி செய்து போட்டால் அழகாக இருக்கும். மார்கழி மாத கோலத்தில் இந்த கோலம் தனி அழகை கொடுக்கும்.

sikku kolam

 Image Credit: pinterest


மேலும் படிக்க: புள்ளிகள் வைத்து போடப்படும் மார்கழி மாத நிலை வாசல் கோலம்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com