நிலை வாசல் கோலம் என்பது தமிழ்நாட்டில் மிகவும் முக்கியதும் பெற்றது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் நிலை வாசல் கோலம் போடுவது மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைக்கும் வழியாக சிலர் கூறுவார்கள். சிலர் குலதெய்வம் வீட்டு வாசலில் குடியிருப்பாதல் வாசலை சுத்தமாகவும், கோலம் போட்டும் வழிபடுவதாக நம்பப்படுகிறது. எப்படி இருந்தாலும் கோலம் என்பது வீட்டிற்கு ஒரு பாசிடிவ் எனர்ஜியை தரக்கூடியதாக இருக்கிறது. அதிலும் மார்கழி மாதம் கோலம் என்பது மேலும் கூடுதல் அழகை சேர்க்கிறது. அப்படி புள்ளிகள் வைத்து போடப்படும் அழகிய நிலை வாசல் கோலங்களைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: ஆன்மிக வழிபாட்டுக்கு ஏற்ற மார்கழி மாத்தில் போடப்படும் அழகிய கோயில் வடிவ கோலங்கள்
7 புள்ளிகளில் தொடங்கி 1 புள்ளியில் நிறைவு பெரும் இந்த கோலம், நிலை வாசலுக்குப் பொருத்தமான கோலமாக இருக்கும். இந்த கம்பி கோலம் வாசலை முழுமையடையச் செய்கிறது. இந்த கோலம் வரை எளிதாக இருக்கும். கோலம் நிறைவில் பூக்கள் வரைந்து வண்ணங்கள் இட்டு நிறைவு செய்யலாம்.
Image Credit: pinterest
13 புள்ளிகள் வைத்துத் தொடங்கப்படும் இந்த கோலம் வாசல் முழுவதும் போடப்படும் கோலமாக இருக்கும். இந்த கோலத்தில் ஆரம்பம், முடிவு மற்றும் மையப்பகுதியில் 3 புள்ளிகள் வைத்து, 1 புள்ளியில் நிறைவடையும் கோலமாக இருக்கும். இந்த கோலம் போட்டு வாசலில் பொட்டு வைத்து பார்த்தால் லட்சுமி கடாட்சத்தை உணர வைக்கும் கோலமாக இருக்கும்.
Image Credit: pinterest
6 இதழ்களை கொண்ட பூக்கள் வரைந்த, பூக்களை சுற்றி வட்டம் இட்டு. வட்டத்தைச் சுற்றி மூன்று அடுக்குகளில் புள்ளிகள் வைத்து, கம்பி கோலம் வரையவும். இந்த கோலம் பார்க்க குழப்பமாக இருந்தாலும் புள்ளிகள் வைத்து போடும் போது எளிமையாக இருக்கும். இந்த கோலம் அழகிய ரங்கோலி வடிவத்தை ஒத்தி இருக்கும்.
Image Credit: pinterest
3 புள்ளிகள் வைத்து தொடங்கப்படும் இந்த கோலம், 1 புள்ளிகளில் நிறைவடையும். இந்த கோலம் இரண்டு பக்கம் மயில் பார்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும்.வண்ணங்கள் இட்டு இந்த கோலங்களை மேலும் அழகுபடுத்தலாம். நிலை வாசலில் தொகையுடன் இருக்கும் இந்த மயில் ஒரு வண்ணமயமான கோலமாக இருக்கும்.
Image Credit: pinterest
6 புள்ளிகளில் தொடங்கி 2 புள்ளிகளில் நிறைவடையும் இந்த நிலை வாசல் கோலம் ஒரு பிரமாண்ட தோற்றத்தைக் கொடுக்கும். இந்த கோலம் சிக்கல் இல்லாத எளிமையாக வரையக்கூடியதாக இருக்கும். இறுதியாகப் பூக்கள் வரைந்து கோலத்தை நிறைவு செய்யலாம்.
Image Credit: pinterest
மேலும் படிக்க: மார்கழி மாதம் வீட்டு வாசலில் கம்பி கோலம் போடுவதின் முக்கியத்துவம்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com