மார்கழி மாதம் ஆன்மீக வழிப்பாட்டிற்கு ஒரு சிறந்த மாதமாக இருக்கிறது. அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டு விளக்கு ஏற்றுவது, தெய்வ கடாட்சத்தை வீட்டிற்குக் கொண்டு வருகிறது. இந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் புதுவிதமான கோலங்கள் வாசலில் போட பெண்கள் விரும்புவார்கள். அதுபோல் உங்களுக்கு விருப்பான சில வகையான கோலங்களை உங்களுக்குக் கொண்டு வந்துள்ளோம். இந்த நாட்களில் புள்ளிகள் வைத்து பெரிய கோலங்கள் போட பெண்கள் ஆசைப்படுவார்கள். உங்களுக்காக சில வண்ணமயமான கோலங்களைப் பார்க்கலாம்.
Dots Design Kolam: புள்ளிகள் வைத்து போடப்படும் மார்கழி மாத நிலை வாசல் கோலம்
21 புள்ளிகளில் தொடங்கி 11 புள்ளிகளில் முற்றுப் பெறும் இந்த பூக்கோலம் இந்த மார்கழி மாத்திற்குச் சிறந்த கோலமாக இருக்கும். கோலத்தின் மையப்பகுதியில் பெரிய பூ, அதனை சுற்றி நட்சத்திர வடிவ பூக்களில் கொடிகளை இனைத்து, அதனுடன் இலைகள் கொண்ட கோலங்கள். அடுத்த அடிக்கில் இரண்டு கிளிகள் அழகாக அமர்த்திருப்பதைப் போல் வரைந்து, அதனை சுற்று அழகிய பூக்களை வரைந்து கோலத்தை நிறைவு செய்யலாம். இந்த கோலத்திற்கு ஏற்ற வண்ணங்களைப் பூசி கொள்ளலாம்.
Image Credit: pinterest
21 புள்ளிகளில் தொடங்கும் இந்த பட்டாம்பூச்சி கோலம் ,நடுவில் நட்சத்திரம் போட்டு, அதை சுற்றி அழகிய சிறு புள்ளிகள் வரையவும். அடுத்த அடுக்கில் பட்டாம்பூச்சி அதன் பக்கத்தில் பூக்கள். இதுபோன்று 6 பட்டாம்பூச்சிகள், 6 பூக்கள் வரைந்து கோலத்தை நிறைவு செய்யவும். இந்த கோலத்தில் அனைத்து பூக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளை வண்ணங்கள் இட்டு கோலத்தை நிறைவு செய்யவும்.
Image Credit: pinterest
21 புள்ளிகளில் தொடங்கும் இடுக்கு புள்ளி கோலம். மையத்தில் 21 முள்ளிகளில் தொடங்கி 1 புள்ளியில் நிறுத்தவும். மையப்பகுதியில் சின்ன பூக்கள், அதை சுற்றி எதிர் எதிர் முனையில் பார்ப்பது போல் தாமரை மலர்களை வரையவும். பின் இந்த தாமரையை அடுத்த புள்ளியில் தொடங்கி பக்கத்தில் பூக்களைக் கொண்டு முடிக்கவும்.
Image Credit: pinterest
21 புள்ளிகளில் தொடங்கும் இடுக்கு புள்ளி கோலம். இந்த கோலம் 21 புள்ளிகளில் தொடங்கி ஒற்றை புள்ளியில் நிறைவு பெரும். நடுவில் சிறு பூக்களில் தொடங்கும் இந்த கோலம், மார்கழி மாத கோலத்திற்கு உகந்தது. புள்ளிகளில் நேர்த்தியாக ரோஜா மலர்களை வரைந்து, இடையில் அம்பு குறிப்பைப்போல் கோலத்தை நிறைவு செய்யவும்.
Image Credit: pinterest
மேலும் படிக்க: ஒரிஜினல் பனாரசி பட்டு புடவைகளை அடையாளம் கண்டு வாங்குவது எப்படி?
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com