
ஊட்டச்சத்து குறைபாட்டினால் முழு உடலும் பாதிக்கப்படும். பொதுவாக இளம் வயதில் பொறித்த உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால் இளம் வயதில் பின்பற்றப்படும் இது போன்ற உணவு வழக்கத்தினால் 30 வயதிற்கு மேல் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஏனெனில் பொறித்த அல்லது ஜங்க் உணவுகளில் இருந்து போதுமான ஊட்டச்சத்தை பெற முடியாது. இக்காரணத்தினால் எதிர்காலத்தில் எலும்பு சார்ந்த பிரச்சினைகளும் வரக்கூடும்.
கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாத நிலையில் எலும்புகள் பலவீனம் அடையலாம். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வரக்கூடிய ஹார்மோன் பிரச்சனைகளாலும் எலும்புகள் பலவீனமடையலாம். எனவே இன்றைய பதிவில் எலும்புகள் பலவீனம் அடைவதற்கான காரணம் மற்றும் தடுப்பு முறையை பற்றி மருத்துவர் நிகில் பன்சாரே அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் சூட்டை குறைக்க நிபுணரின் இரண்டு சிறந்த ஆலோசனைகள்!

எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் மிகவும் முக்கியமானது கால்சியம். எனவே நீங்கள் உண்ணும் உணவில் கால்சியம், வைட்டமின் D போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதநிலையில் எலும்புகளின் அடர்த்தி குறையலாம்.
எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உடல் செயல்பாடுகளும் அவசியம். உடற்பயிற்சி இன்மை மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற சூழல்களாலும் எலும்புகள் பலவீனம் அடையலாம்.
மாதவிடாய் நின்ற பிறகு, பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுகிறது. எலும்பு அடர்த்தியை பராமரிக்க ஈஸ்ட்ரோஜன் அவசியம். ஆகையால் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது எலும்புகள் பலவீனமடைகின்றன. மேலும் பாராதைராய்டு ஹார்மோன் (PTH), தைராய்டு ஹார்மோன்கள் போன்ற ஹார்மோன்கள் எலும்புகளின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளாலும் எலும்புகள் பலவீனமடையலாம்.
ஒரு பெண்ணின் குடும்ப உறுப்பினருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் அல்லது எலும்பு அடர்த்தி பிரச்சனை இருந்தால், மரபணு ரீதியாக அந்த பெண்ணுக்கும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் போன்ற பிரச்சனைகளுக்காக மருந்துகளை எடுத்துக்கொள்வதாலும் எலும்புகளின் அடர்த்தி குறையலாம். இது போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.

சமச்சீரான உணவுகள் : கால்சியம், வைட்டமின் D மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதன் மூலம் எலும்பு அடர்த்தியை மேம்படுத்தலாம்.
உடற்பயிற்சி : எலும்புகளின் அடர்த்தியை பராமரிக்க பலவீனம் அடையாமல் பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
வழக்கமான பரிசோதனைகள் : சரியான நேரத்தில் அடர்த்தி குறைவாக உள்ள அல்ல பலவீனமான எலும்புகளை கண்டறிவதன் மூலம் பல சிக்கல்களைத் தடுக்கலாம். இதற்கான சோதனைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த எண்ணெய் உங்கள் தொப்பையை குறைக்க உதவும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com