Reduce Body Heat : உடல் சூட்டை குறைக்க நிபுணரின் இரண்டு சிறந்த ஆலோசனைகள்!

சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த இரண்டு குறிப்புகளை பின்பற்றி பயன் பெறுங்கள்…

expert tips to reduce heat

அடிக்கடி வியர்வை வருவதும், உடல் சூட்டினால் வயிறு வலிப்பதும் உடல் உஷ்ணத்தை குறிக்கின்றன. கோடை பருவ காலத்தில் உடலின் உஷ்ணம் அதிகரிப்பதை தவிரக்க முடியாதது. உடல் சூடு அதிகரிக்கும் பொழுது தூக்கமின்மை, கண் எரிச்சல், வயிற்று வலி, அல்சர் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிக வெப்பம் மற்றும் ஒரு சில உணவுகளால் உடல் சூடு அதிகரிக்கும். மேலும் வெயிலில் அதிக நேரம் செலவிடுவது, காரமான உணவுகள், ஒரு சில பருப்புகள், இறைச்சி மற்றும் அதிக புரதம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும் உடல் சூடு அதிகரிக்கும். இந்த காரணங்களை தவிர்த்து மருத்துவ பிரச்சனைகளாலும் உடல் சூடு அதிகரிக்கலாம். எனவே இன்றைய பதிவில் உடல் சூட்டை தணிக்க நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த இரண்டு குறிப்புகளை பார்க்கப்போகிறோம். பின்வரும் குறிப்புகளை ஆயுர்வேத நிபுணர் ஷேத்தின் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பு 1

prunes to reduce body heat

தேவையான பொருட்கள்

  • உலர் திராட்சை 8-10
  • ப்ரூன் 2-3
  • உலர்ந்த அத்திப்பழம் - 1

பயன்படுத்தும் முறை

  • உலர் திராட்சை, ப்ரூன், அத்திப்பழம் ஆகிய மூன்றையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • காலையில் எழுந்தவுடன் இவற்றை சாப்பிடவும். காலை உணவுக்கு முன் இவற்றை சாப்பிட வேண்டும்.
  • இது உடல் சூட்டை தணிக்கவும், குடல் இயக்கத்தை எளிதாகவும் உதவும்.

குறிப்பு 2

ghee to reduce body heat

தேவையான பொருட்கள்

  • பால் - 1 கப்
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • வெதுவெதுப்பான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் கலந்து இரவு தூங்க செல்வதற்கு முன் குடிக்கலாம்.
  • இது மலச்சிக்கலை போக்கவும், உடல் சூட்டை தணிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மற்ற குறிப்புகள்

  • உடல் சூட்டை குறைக்க சப்ஜா விதைகளை தண்ணீர் அல்லது குளிர்ந்த பாலில் ஊறவைத்து காலையில் குடிக்கலாம். இதில் மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன .
  • கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பார்லி தண்ணீர் அல்லது பார்லி கஞ்சி குடிக்கலாம். இது மலச்சிக்கலில் இருந்தும் விடுபட உதவும். பார்லியில் வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற பல அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன.
  • இதனுடன் தயிரையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் தயிரை கடைந்து மோராகவும் குடிக்கலாம்.
  • இளநீரில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் C போன்ற சத்துக்கள் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும்.
  • கோடையில் தர்பூசணி பழங்களை சாப்பிட்டால் உடல் சூட்டை குறைக்கலாம். மேலும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.

இந்த பதிவும் உதவலாம்: அதிகரிக்கும் மூளை கட்டியின் அபாயம், இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP