
தொப்பை காரணமாக, அடிவயிற்று பகுதியில் கொழுப்பு சேரும்பொழுது பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுகின்றன. பலரும் தங்களுடைய எடை மற்றும் கொழுப்பை குறைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஒரு சிலர் இந்த முயற்சிகளில் வெற்றி பெற்றாலும் அவை நிரந்தரமாக இருப்பதில்லை. ஏனெனில் தொடர்ந்து குறைந்த கார்போஹைட்ரேட் அல்லது அதிக புரதம் உள்ள உணவுகளை சாப்பிடும் பொழுது அவை நிரந்தர பலன் தராமல் போகலாம்.
கொழுப்பை குறைக்க ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை பின்பற்ற வேண்டும். இது போன்ற செயல்பாடுகளால் உடல் எடை குறைவதோடு மட்டுமின்றி ஆரோக்கியமும் மேம்படும். நம்மை சுற்றியுள்ள இயற்கையான ஒரு சில உணவுகள் மூலமாகவே இதை சாத்தியமாக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: அதிகரிக்கும் மூளை கட்டியின் அபாயம், இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!
அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் ஒரு சிறந்த எண்ணெயை பற்றி இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். ஆம், தொப்பையை குறைக்க நல்லெண்ணெய் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பதிவில் படித்து தெரிந்து கொள்வோம். இது குறித்த தகவல்களை ஆயுர்வேத நிபுணர் ஜிதுஞ்சதன் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

நல்லெண்ணெயில் நிறைந்துள்ள வைட்டமின் E தசைகளை வலுப்படுத்தவும், உடல் தகுதியை மேம்படுத்தவும் உதவுகிறது. தலைமுடி, சருமம் மற்றும் நகங்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் E தேவைப்படுகிறது. மேலும் தசைகள் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சிக்கும் வைட்டமின் E அவசியம். இது இதய நோய், பெருந்தமனி தடிப்பு, பக்கவாதம் போன்ற பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது
நல்லெண்ணையில் நிறைந்துள்ள புரதம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியை குறைக்கவும் உதவுகிறது. இது கலோரி உட்கொள்ளலை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. மேலும் தசைகளின் உருவாக்கத்திற்கும் புரதம் மிகவும் அவசியம்.
புரதச்சத்தை தவிர நல்லெண்ணையில் கால்சியம் துத்தநாகும் தாமிரம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
நல்லெண்ணெயில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை ஜீரணிக்க கூடுதல் நேரம் தேவைப்படும். ஆகையால் அதிக கலோரிகளும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதன் மூலம் உங்கள் உடல் எடையையும் சுலபமாக குறைக்கலாம். மேலும் இது இரத்த சர்க்கரையின் அளவுகள் அதிகரிப்பதையும் தடுக்கிறது.

நல்லெண்ணையில் உள்ள லிக்னான்கள் கொழுப்பை எரிக்க உதவுகின்றன. மேலும் இவை கெட்ட கொலஸ்ட்ராலின் உறிஞ்சுதல் மற்றும் கொழுப்பின் வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கின்றன.
இதில் டிரிப்டோபன் மற்றும் பாலிபினால்கள் எனும் இரண்டு சக்தி வாய்ந்த அமினோ அமிலங்கள் உள்ளன. இவை பிடிவாதமான தொப்பையை அகற்ற உதவுகின்றன. மேலும் இதில் குறைந்த அளவு சோடியம் மட்டுமே உள்ளதால், உடலில் ஏற்படும் நீர் தேக்கத்தை கட்டுப்படுத்தும்
நல்லெண்ணெய் சூடான விளைவை கொண்டுள்ளது, எனவே கோடையில் இதை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: சிறுநீர் பாதை தொற்றில் இருந்து விடுபட உதவும் 5 வீட்டு வைத்தியங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com