தீபாவளியின் போது, குறிப்பாக பட்டாசு புகையால் ஏற்படும் காற்று மாசுபாடு, நமது சருமத்தையும், கூந்தலையும் கடுமையாக பாதிக்கிறது. இது சருமத்தில் மந்தமான தோற்றம், முன்கூட்டிய வயதான தோற்றம் (Premature Aging) மற்றும் தலைமுடி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதிலிருந்து தப்பிக்க, சில எளிய வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.
மேலும் படிக்க: Chia seed: அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? இந்த 5 சியா விதை ஹேர்பேக்குகளை பயன்படுத்தவும்
பொதுவாகவே, காற்றில் உள்ள மாசுபாடு நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது. தீபாவளி சமயத்தில், பட்டாசு புகை, நச்சுகள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றால் ஏற்படும் மாசுபாடு இந்த சிக்கலை மேலும் அதிகரிக்கிறது. இந்த நச்சுகள் சருமத்தின் மேற்பரப்பை தாக்கி, அதன் சமநிலையை பாதிக்கின்றன. இதன் விளைவாக, முன்கூட்டிய வயதான அறிகுறிகள், சரும உணர்திறன், தடிப்புகள், மற்றும் முகப்பரு போன்றவை ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்கு செய்ய வேண்டிய செயல்முறைகளை முதலில் பார்ப்போம்.
ஒரு டேபிள்ஸ்பூன் குளிர்ந்த பாலுடன், 2 துளிகள் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்தக் கலவையில் சிறிது காட்டனை நனைத்து முகத்தை சுத்தமாக துடைக்கலாம். இவ்வாறு, முகத்தை சுத்தப்படுத்திய பிறகு, பன்னீர் கொண்டு முகத்தை துடைக்கவும். இது சுத்தப்படுத்தும் செயல்முறையை நிறைவு செய்து, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.
இது தவிர சருமத்தில் தடிப்புகள் அல்லது சிறிய கொப்புளங்கள் இருந்தால், சந்தனத்தை சிறிது பன்னீருடன் சேர்த்து முகத்தில் தடவவும். இதனை 15 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி விடலாம். இவ்வாறு செய்வது எரிச்சலை குறைக்க உதவும். மேலும், வாரத்திற்கு ஒரு முறை முகத்தில் ஸ்க்ரப் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க: சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமா? இந்த 5 பழக்கங்களை தினசரி கடைபிடிக்கவும்
இதற்கு எள், உலர்ந்த புதினா இலைகள் மற்றும் தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். எளி மற்றும் புதினாவை பொடியாக்கி தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம். சுமார் 5 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பொலிவாக மாறும்.
மாசுபாடு காரணமாக நம்முடைய உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. கூந்தலையும் சரியான முறையில் பராமரிப்பது முக்கியம். கூந்தல் வறண்டு இருந்தால் ஷாம்பு பயன்படுத்துவதற்கு முதல் நாள் இரவு தலைக்கு எண்ணெய் தேய்க்கலாம்.
உங்கள் கூந்தலின் தன்மை அறிந்து மிதமான மூலிகை கலந்த ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். ஷாம்பூவை பயன்படுத்துவதற்கு முன், அதை சிறிது தண்ணீரில் கலந்து நீர்த்து போகச் செய்த பிறகு பயன்படுத்துவது நல்லது. தலையில் இருந்து அழுக்குகள் நீங்கும் வரை நன்றாக அலசிய பின்னர், கண்டிஷனிங் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஷாம்புவுக்கு பிறகு, ஒரு க்ரீமி கண்டிஷனரை எடுத்து முடியில் லேசாக மசாஜ் செய்யவும். இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து சாதாரண தண்ணீரால் அலசவும். இது முடியை மிருதுவாக்கி, சீராக வைத்திருக்க உதவும். இவ்வாறு செய்யும் போது கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த செயல்முறைகளை பின்பற்றி உங்கள் கூந்தல் மற்றும் சருமத்தை பாதுகாப்பாக பராமரிக்கலாம். இவை உங்களுக்கு இயற்கையான பொலிவையும் அளிக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com