இன்றைய தலைப்பு பற்றிய புரிதல் மிகவும் அத்தியாவசியமானது. ஏனெனில் பெண்கள் பெரும்பாலும் தாம்பத்திய உறவு குறித்த விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. இது பற்றி பேசினால் தன்னை பற்றி யாரேனும் தவறாக எண்ணி விடுவார்களோ என்ற எண்ணத்தில் இது போன்ற விஷயங்களை அவர்கள் விவாதிப்பதும் இல்லை.
தாம்பத்திய உறவை பற்றிய கண்ணோட்டமும், தேவையும் நபருக்கு நபர் மாறுபடலாம். ஆனால் தாம்பத்திய உறவை வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை தம்பதியர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீண்ட காலமாக உடலுறவு கொள்ளாமல் இருப்பதால் ஏற்படடக்கூடிய வித்தியாசங்கள் குறித்த ஆய்வை பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையம் (NCBI) நடத்தியது. அந்த ஆய்வில் 17,744 நபரிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டது, அதில் 15.2% ஆண்கள் மற்றும் 26.7% பெண்கள் ஒரு வருடமாக உடலுறவு கொள்ளாதவர்கள் மற்றும் 8.7% ஆண்கள் மற்றும் 17.5% பெண்கள் 5 ஆண்டுகளாக உடலுறவு கொள்ளாதவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒருவருடைய மகிழ்ச்சியின் நிலை முதல் உடல் செயல்பாடு வரை அனைத்தையும் பாதிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: இனி ஜோடியாக உடற்பயிற்சி செய்யலாம், இது தம்பதிகளுக்கான ஒர்க் அவுட்ஸ் !
தாம்பத்திய உறவில் ஈடுபடும் பொழுது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது, மன அழுத்தத்தை குறைப்பது போன்ற நன்மைகளை தரும். ஆனால் நீண்ட காலத்திற்கு தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இருக்கும் பொழுது பின்வரும் விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
நல்ல ஆரோக்கியமான தாம்பத்திய உறவில் ஈடுபட்ட தம்பதிகள் சூழ்நிலை காரணமாக இதை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது நிச்சயமாக ஒருவருடைய மனநிலையை பாதிக்கும். தனிமையில் வாழும் பொழுது மன அழுத்தமும் அதிகரிக்கும்.
தாம்பத்திய உறவிற்கும் இரத்த அழுத்தத்திற்கும் நேரடி தொடர்பு கிடையாது இருப்பினும் மன அழுத்தம் உயரும் பொழுது இரத்த அழுத்த பிரச்சனையும் உருவாகலாம்.
2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வு, தாம்பத்திய உறவற்ற தம்பதியர்களின் உறவு பாதிக்கப்படும் என தெரிவிக்கிறது. இந்த காரணத்தினால் பல திருமண வாழ்க்கையும் முறிந்து விடுகிறது.
இதுவும் மன அழுத்தத்துடன் தொடர்புடையது. நீண்ட காலமாக தாம்பத்திய உறவில் ஈடுபடாத தம்பதியர்களுக்கு பதட்டமும் அதிகரிக்கலாம். தாம்பத்திய உறவில் ஈடுபடும் பொழுது வெளியிடப்படும் ஹார்மோன்கள் பதட்டத்தை குறைக்க உதவுகின்றன.
தாம்பத்திய உறவில் ஈடுபடாத பொழுது உடல் அளவிலான மாறுதல்கள் இருக்காது இருப்பினும் மனதளவில் ஒரு சில மாற்றங்களை உணரலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வெந்நீரில் 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி கலந்து குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com