பொதுவாக பெண்களுக்கு ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவர்களால் அதற்கான நேரத்தை ஒதுக்க முடியாமல் போகிறது. ஃபிட் ஆக சரியான உடல் எடையுடன் இருப்பது அழகு மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டும் அல்ல, சரியான உடல் எடை நல்ல ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது. வீட்டு வேலைகளை ஒருபோதும் தவிர்ப்பதில்லை நீங்கள். உங்களை கவனித்து கொள்வது அனைத்தையும் விட மேலானது. எனவே இனி உடற்பயிற்சிக்கான நேரத்தை நிச்சயம் ஒதுக்க தவறாதீர்கள்.
முடிந்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள், பெரியர்வர்கள் என அனைவரும் சேர்ந்து உடற்பயிற்சி அல்லது யோகாவை செய்யலாம். குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்ய கற்றுக் கொடுப்பது அவர்களின் கவனம், சிந்திக்கும் திறன் மற்றும் மன நிலையை மேம்படுத்தும். குழந்தைகளுக்கு நாம் ஒரு நல்ல முன் உதாரணமாக இருப்போம்.
இந்த பதிவும் உதவலாம்: வெந்நீரில் 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி கலந்து குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!
இன்றைய பதிவில் உங்கள் கணவருடன் சேர்ந்து செய்யக்கூடிய சில எளிய பயிற்சியை பார்க்கப் போகிறோம். உங்களுக்கு சிறு பிள்ளைகள் இருந்தால் அவர்களையும் இந்த பயிற்சியில் இணைத்துக் கொள்ளலாம். இது போன்று பயிற்சிகள் உங்கள் குடும்ப உறவை வலுப்படுத்தும். இந்த சுலபமான ஐந்து பயிற்சியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். பின்வரும் பயிற்சிகளை யோகா நிபுணரான ரியா அஜ்மெரா அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பயிற்சி 1
- இந்த பயிற்சி செய்வதற்கு, முதலில் இருவரும் எதிர் திசையை நோக்கி நின்று கொள்ளுங்கள்.
- பின்னர் ஒரு தலையணையை வலது புரமாக கொடுத்து, இடது புரமாக வாங்குங்கள்.
- இதே முறையில் மற்ற திசையிலும் மாற்றி பயிற்சி செய்யலாம்.
- இருபுறமும் இடுப்பை சுழற்றி செய்யப்படும் இந்த பயிற்சியானது உங்கள் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்.
பயிற்சி 2
- இந்த பயிற்சி செய்வதற்கு இருவரும் எதிர் திசையை நோக்கி, கால்களை சற்று விலக்கி வைத்து நிற்க வேண்டும்.
- பின்னர் தலையணையை கீழ்புறமாக கொடுத்து மேலே வாங்க வேண்டும்.
- குனிந்து நிமிர்ந்து செய்யப்படும் இந்த பயிற்சியானது உங்கள் முதுகு தண்டு பகுதிக்கு நன்மை தரும். இது அடிவயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும் உதவியாக இருக்கும்.
பயிற்சி 3
- இருவரும் எதிர்திசையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும்படி உட்கார வேண்டும்.
- பின்னர் கைகளை பிடித்துக் கொண்டு கால்களை உயர்த்தவும்.
- இருவரின் கால் பாதங்களும் சேர்ந்து இருக்க வேண்டும்.
பயிற்சி 4
- இருவரின் முதுகும் ஒன்று சேர இருக்கும் படி நிற்கவும்.
- பின்னர் ஆதரவிற்காக, படத்தில் இருப்பதை போல கைகளை பிடித்துக் கொள்ளவும்.
- இப்போது முழங்காலை மடக்கி நாற்காளி போஸில்(chair pose) உட்கார வேண்டும்.
- சுவாசிப்பதில் கவனம் செலுத்தி உங்களால் முடிந்தவரை இந்த போஸில் இருக்கலாம்.
பயிற்சி 5
- இந்தப் பிராணயாமா செய்வதற்கு இருவரும் சம்மணம் போட்டு தரையில் உட்காரலாம் அல்லது பத்மாசனம் தோரணையில் உட்காரலாம்.
- நீங்கள் விரும்பும் முத்திரையை வைக்கலாம் அல்லது கைகளை மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் வைத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக வெளியேற்றவும்.
- சுவாசிப்பதில் கவனம் செலுத்தி இந்த மூச்சுப் பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
- தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொண்டால் பல உடல் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். இனி தம்பதிகளாக உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்துடன் சேர்த்து உங்கள் உறவையும் வலுப்படுத்துங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களின் கருப்பை வலுப்பெற, கருப்பை கட்டிகளை தடுக்க இதை தினமும் செய்யுங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation