
உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் இலவங்கப்பட்டையும் ஒன்று. இது உணவின் சுவை மற்றும் மணத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகிறது.
இலவங்கப்பட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், வைட்டமின்கள், நியாசின், தியாமின், லைகோபீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் யாவும் பல உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றன. வெந்நீரில் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி கலந்து குடிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகளை இப்போது விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கோடையில் கொழுப்பை ஈஸியா குறைக்கலாம், இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க!

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெந்நீரில் இலவங்கப்பட்டை பொடி கலந்து குடிக்கலாம். இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பை எளிதாக்குகிறது. வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பட்டை பொடி சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது உங்களை நிறைவாக வைத்திருக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் பசி மற்றும் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
இலவங்கப்பட்டையில் பாலிஃபீனால்களுடன் ஆன்டி-வைரல், ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இவை அனைத்தும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. வெந்நீரில் இலவங்கப்பட்டை பொடி கலந்து குடிப்பது சளி மற்றும் பல நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க இலவங்கப்பட்டை உதவும். இது இன்சுலின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். ஆகையால் சர்க்கரை நோயாளிகள் இதை சரியான அளவுகளில் எடுத்துக்கொண்டு பயனடையலாம்.

இன்றைய காலகட்டத்தில் பல பெண்களும் PCOS பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாறுதல்களால் கருமுட்டையின் வளர்ச்சி, மாதவிடாய் சுழற்சி, கருவுறுதல் போன்ற விஷயங்கள் பாதிக்கப்படுகின்றன. இது போன்ற நிலைகளை சமாளிக்க வெந்நீரில் இலவங்கப்பட்டை பொடி மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இந்த நீர் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியையும் குறைக்கிறது.
வயிறு சார்ந்த பிரச்சனைகளை போக்குவதில் இலவங்கப்பட்டை நீர் பயன் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். மேலும் செரிமான மண்டலத்தின் செயல்முறையும் மேம்படும். இந்த நீரை குடிப்பதன் மூலம் அசிடிட்டி, வாய்வு போன்ற தொந்தரவுகளையும் நீக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தலைவலியை போக்கும் ஐந்து மூலிகைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com