மாதவிடாய் காலத்து உதிரத்தின் நிறங்களும் அர்த்தங்களும்

மாதவிடாய் இரத்தத்தின் நிறம் உங்கள் கருப்பை ஆரோக்கியத்தை பற்றிச் சொல்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பெண்கள் இவற்றை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்...

periods color

மாதவிடாய் தொடர்பான தடைகளை உடைத்து, இப்போது தான் பெண்கள் தங்கள் பாலியல் பிரச்சனைகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படையாகப் பேச தொடங்கி இருக்கிறார்கள். உங்கள் மாதவிடாய் இரத்தப்போக்கு எந்த நிறத்தில் இருக்க வேண்டும்? இதை தெரிந்து கொண்டால் பல உடல்நல பிரச்சனைகளை உங்களால் தவிர்க்க முடியும். இரத்தத்தின் நிறம் மற்றும் அமைப்பு மாதத்திற்கு மாதம் மாறுபடலாம் மற்றும் மாதவிடாய் காலத்திற்கு இடையிலும் மாறலாம். மேலும், ஹார்மோன் மாற்றங்களை தவிர, பெண்களின் உணவு முறை, வாழ்க்கை முறை, வயது மற்றும் சுற்றுச்சூழல், இவை அனைத்தும் கூட இரத்தத்தின் நிறத்தை மாற்றும்.

தொற்று, கர்ப்பம் மற்றும் சில அரிதான சூழல்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகியவற்றால் அசாதாரண இரத்த நிறம் அல்லது ஒழுங்கற்ற இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கர்ப்பமாக இருக்கும் எந்தவொரு பெண்ணும், தனக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது அசாதாரண யோனி வெளியேற்றத்தைக் கண்டாலோ உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். மாதவிடாய் இரத்தம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது? இதைப் பற்றி நொய்டாவில் உள்ள மகப்பேரு மருத்துவமனையின் ஆலோசகர் மகப்பேறு மருத்துவர் சந்தீப் சாதாவிடம் இருந்து விரிவாக அறிந்து கொள்வோம்.

பிரகாசமான சிவப்பு இரத்தம்

பிரகாசமான சிவப்பு மற்றும் அடர் சிவப்பு இரத்தம் இரண்டுமே ஆரோக்கியமான மாதவிடாயின் அறிகுறிகள். இரத்தம் பிரகாசமான சிவப்பு நிறமாக இருக்கும்போது, அது புதியதாக இருக்கும். உங்கள் மாதவிடாயின் தொடக்கத்தில் இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் போது, இது மிகவும் பொதுவானதாக இருக்கிறது.

black periods in tamil

அடர் சிவப்பு அல்லது பழுப்பு இரத்தம்

மாதவிடாய் காலத்தின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ பழுப்பு நிறத்தில் ரத்தப்போக்கு இருப்பது இயல்பானது மற்றும் இது வெளியேற்றப்பட்ட இரத்தம் பழையது என்பதை மட்டுமே குறிக்கிறது.

இளஞ்சிவப்பு நிற இரத்தம்

மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் இளஞ்சிவப்பு நிற இரத்தத்தை கவனித்தால், அது இரத்தத்துடன் கர்ப்பப்பை வாய் திரவம் கலப்பதால் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும், இரத்த ஓட்டம் இயல்பை விட குறைவாக இருந்தால், அது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருக்கிறது என்பதை குறிக்கலாம்.

கருப்பு நிற இரத்தம்

மாதவிடாயின் போது கருப்பு நிற ரத்தம் என்பது கருப்பையை விட்டு வெளியேற நீண்ட நேரம் எடுத்து கொள்ளும் இரத்தம் மற்றும் அதிக ஆக்ஸிஜனேற்றம் கொண்ட இரத்தமாகும். அசாதாரணமான மாதவிடாய் உள்ள பெண்களுக்கு இது பொதுவானதாக இருக்கலாம்.

ஆரஞ்சு நிற இரத்தம்

மாதவிடாயின் இரத்த போக்கு பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் வருவது என்பது பிறப்புறுப்பில் ஏதேனும் தொற்று இருப்பதற்கான அறிகுறியாகும். உதாரணமாக, பாலியல் ரீதியாக பரவும் தொற்று (STI) அல்லது சாதாரண பாக்டீரியா தொற்று. இந்த இரத்தம் அசாதாரண வாசனையுடன் வரலாம் அல்லது இந்த இரத்தத்தின் அமைப்பில் மாற்றம் இருக்கலாம். இந்த சமயத்தில் பெண்கள் மகளிர் மருத்துவ நிபுணரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

dark brown color periods

சாம்பல் நிற இரத்தம்

இந்த வகையான மாதவிடாய் இரத்தம் அல்லது பிறப்புறுப்பு வெளியேற்றம், பெண்ணுக்கு ஏதேனும் தொற்று இருப்பதைக் குறிக்கிறது. எனவே சிகிச்சைக்காக ஒரு மகளிர் மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெற கிளம்பி விட வேண்டும். பாக்டீரியல் வஜினோசிஸ் என்பது மிகவும் பொதுவான தொற்று ஆகும், ஆனால் பிறப்புறுப்பு வெளியேற்றத்தின் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டால், அது உங்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

இதுவும் உதவலாம் :பெண்கள் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை இயற்கையாக குறைப்பது எப்படி?

மாதவிடாய் இரத்தத்தின் வெள்ளை நிற அல்லது நீர் போன்ற வெளியேற்றம்

மாதவிடாய் இரத்தத்தில் கூடுதல் வெள்ளை வெளியேற்றம் ஆகியவை கர்ப்பப்பை வாய் அரிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இதற்கு மேலும் மருத்துவர் ஆலோசனை தேவைப்படும்.

மாதவிடாய் உறைதல்

மாதவிடாயின் போது சிறு சிறு இரத்தக் கட்டிகள் ஏற்படுவது இயற்கையானது. முதல் சில நாட்களில் ரத்தம் அதிகமாக வெளியேறுவது என்பது இயல்பானது தான். இரத்தம் தேங்கி உறைய ஆரம்பிக்கும் போது, ரத்த கட்டிகள் உருவாகின்றன. ஆனால் கட்டிகள் பெரிய அளவில் இருந்து கொண்டே இருந்தால் மற்றும் தொடர்ந்து இருந்தால், அவை ஏதோ ஒரு பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என்று அர்த்தம் கொள்ள வேண்டும் மற்றும் நார்த்திசுக்கட்டிகள், கருப்பை பாலிப்கள் அல்லது எண்டோமெட்ரியோசிஸ் போன்ற நிலைமைகளையும் அது குறிக்கலாம்.

சவ்வு தன்மையை கொண்ட மாதவிடாய்

ஒரு பெண் தனது மாதவிடாய் இரத்தத்தில் சவ்வு அல்லது திசுக்களைக் கண்டால், ஏதோ கோளாறு ஏற்படுகிறது என்று மனதில் கொள்ள வேண்டும். சிலருக்கு மாதவிடாய் இரத்தத்தில் சவ்வு அல்லது திசு ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் என்றால் அது ஹார்மோன் பிரச்சனைகள் அல்லது கருச்சிதைவு ஆகியவையாக இருக்கலாம். தேவையற்ற நிற இரத்த போக்கு வெளியேறுவதைத் தவிர்க்க, ஒரு பெண் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP