herzindagi
reduce estrogen levels

Reduce Estrogen Levels : பெண்கள் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை இயற்கையாக குறைப்பது எப்படி?

பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் போது பலவிதமான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.  இந்த கட்டுரையில், ஈஸ்ட்ரோஜன் அளவை எவ்வாறு குறைக்கலாம் என்று பார்க்கலாம்...
Editorial
Updated:- 2023-04-01, 05:25 IST

ஈஸ்ட்ரோஜன் என்பது பெண் உடலில் காணப்படும் ஒரு பாலியல் ஹார்மோன் ஆகும். பெண் பருவமடையும் போது அவளுடைய உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு இந்த ஹார்மோன் பெருமளவு காரணமாகும். பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் சரியான அளவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கருவுறாமை ஆகிய பிரச்னைகள் இந்த ஹார்மோனுடன் நேரடியாக தொடர்புடையது. இந்த ஹார்மோன் அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், அது பெண்களின் உணர்வுகளை பெரிதும் பாதிக்கிறது.

எனவே பெண்களுக்கு சரியான மாதவிடாய் ஏற்பட மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, இந்த ஹார்மோன் சரியான அளவில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஒழுங்கற்ற வாழ்க்கை முறை அல்லது சில உடல் நல குறைவுகள் காரணமாக ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியானது பாதிக்கப்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி அதிகரிக்கும் போது, உடலில் சில அறிகுறிகள் தோன்றத் தொடங்குகிறது.

இதுவும் உதவலாம் :ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க உதவும் யோகாசனங்கள்

  • ஒழுங்கற்ற மாதவிடாய்
  • முகப்பரு
  • மனம் அலைபாய்வது
  • சோர்வு மற்றும் எரிச்சல்
  • உடல் எடை அதிகரிப்பு
  • தூக்க முறைகளில் மாற்றம்

உணவியல் நிபுணர் மன்ப்ரீத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து இது சம்பந்தமான ஒரு சமையல் குறிப்பு பற்றி கூறியுள்ளார், மிகவும் எளிதானது மற்றும் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதை குறைக்க உதவுகிறது. இந்த சமையல் குறிப்பில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களிலும் சில குறிப்பிட்ட சிறப்பான பண்புகள் உள்ளன. இவற்றின் காரணமாக, இது ஈஸ்ட்ரோஜன் அளவை சமநிலைப்படுத்துவதில் பெரிதும் உதவியாக இருக்கும். இதை பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தயிர் கெபாப்ஸ்

தேவையான பொருட்கள்

  • கெட்டி தயிர் - 1 கப்
  • பன்னீர் - 1/2 கப்
  • கேரட் - 1/2 கப்
  • குடைமிளகாய் - 1/2 கப்
  • ப்ரோக்கோலி - 1/2 கப்
  • நெய் - 1 டீஸ்பூன்
  • கல் உப்பு - 1/4 டீஸ்பூன்
  • கருப்பு மிளகு - 1/4 ஸ்பூன்
  • அஜ்வைன் - 1/4 டீஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் - 1/4 டீஸ்பூன்

foods for high estrogen

செய்முறை விளக்கம்

  • ஒரு பாத்திரத்தில் அனைத்து காய்கறிகளையும் (கேரட், ப்ரோக்கோலி மற்றும் கேப்சிகம்) லேசாக வதக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் கெட்டி தயிர், பன்னீர் மற்றும் காய்கறிகளை சேர்த்து கலக்கவும். அதனுடன் கருப்பு மிளகு மற்றும் கல் உப்பு சேர்க்கவும்.
  • அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.
  • அதை சிறு சிறு உருண்டைகளாக செய்து, தவாவில் வறுக்க வேண்டும். இவை பொன்னிறமாகும் வரை தவாவில் வறுக்கவும்.

இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

  • தயிரில் ப்ரோபயாடிக்குகள் உள்ளன இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
  • குடைமிளகாயில் வைட்டமின் C காணப்படுகிறது. இது ஈஸ்ட்ரோஜன் நச்சுக்களை நீக்கும் என்சைம்களை செயல்படுத்துகிறது.
  • கேரட்டில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது குடல் இயக்கத்தை அதிகரிக்கிறது.
  • ப்ரோக்கோலியில் குளுக்கோசினோலேட்டுகள் உள்ளன. ஈஸ்ட்ரோஜன் உடைவதற்கு கல்லீரலில் உள்ள ஒரு நொதி உதவுகிறது. அந்த நொதியை குளூகோசினோலேட்டுகள் அதிகரிக்கிறது.
  • பன்னீர் லெப்டின் உணர்திறனை அதிகரிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
  • கருப்பு உப்பு செரிமான சாறுகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.
  • கொத்தமல்லி செரிமானத்திற்கு உதவும் சாறுகளின் சுரப்பை அதிகரிக்கிறது.
  • கொத்தமல்லி தூளில் லினலூல் உள்ளது, இது ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் கார்மினேடிவ் பண்புகளைக் கொண்டுள்ளது.

easy way to reduce estrogen levels

இதுவும் உதவலாம் : கழுத்தை சுற்றியுள்ள கருமை ஒரு தீவிர நோயின் அறிகுறியா !

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com