
நாம் இயல்பானது என்று கருதும் சில உணவு வகைகள், நம்முடைய நீண்ட கால ஆரோக்கியத்தை படிப்படியாக பாதிக்கலாம். இவற்றை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வது பல வகையான சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். அதன்படி, நாம் தவிர்க்கக் கூடிய சில உணவுகளை இந்தப் பதிவில் காண்போம்.
மேலும் படிக்க: Badam pisin benefits: எலும்புகளை பலப்படுத்துவது முதல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை; பாதாம் பிசின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
சாதாரணமான வெள்ளை சர்க்கரையை நாம் நாள்தோறும் அதிகமாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால், இதன் மூலம் நமக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படக் கூடும். குறிப்பாக, இதனை அதிகமாக சாப்பிடும் போது உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

பீட்சா, பர்கர், பிரட் மற்றும் பேக்கரி உணவு பொருட்கள் போன்ற மைதா சார்ந்த உணவுகள் செரிமான மண்டலத்தை பாதிக்கும். இவற்றை நீண்ட காலம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், உடல் எடை அதிகரிப்பு மற்றும் இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
மேலும் படிக்க: Sardine fish benefits: கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; எலும்புகளை வலுவாக்கும்; மத்தி மீனின் நன்மைகள்
சமோசா, பஜ்ஜி மற்றும் சிப்ஸ் போன்ற அதிகமாக எண்ணெயில் பொரித்த உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இவை இருதயம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கக் கூடும்.

அதிக சர்க்கரை மற்றும் ரசாயனங்கள் கொண்ட உணவுகள் இன்சுலின் அளவை சீர்குலைத்து, எலும்புகளை பலவீனப்படுத்தி, உடல் பருமனை வேகமாக அதிகரிக்கலாம்.
சந்தையில் கிடைக்கும் செயற்கை குளிர்பானங்களில் உண்மையான பழங்களை விட, சர்க்கரை மற்றும் செயற்கை சுவைகள் அதிகமாக உள்ளன. இவற்றை ஆரோக்கியமானவை என்று நினைத்து உட்கொள்வது காலப்போக்கில் தீங்கு விளைவிக்கும்.
சிப்ஸ், கார வகைகள், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் பிற பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களில் அதிக உப்பு இருக்கிறது. இவை இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இந்த உணவுகளை முழுமையாக தவிர்ப்பது எளிதல்ல என்றாலும், அவற்றின் பயன்பாட்டை குறைத்து, அதற்கு பதிலாக வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கையான உணவுகளை தேர்ந்தெடுப்பது ஆரோக்கியத்தை பராமரிக்க சிறந்த வழியாகும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com