மாதவிடாய் காலங்களில் ஒவ்வொரு பெண்களும் தங்களது சுகாதார விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். இதை கவனிக்கவில்லை என்றால் கடுமையான நோய்கள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பெண்கள் மாதவிடாய் நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான சுகாதார விஷயங்களை பற்றி இந்த பதிவில் பகிர்கிறோம் படித்து பயனடையுங்கள்.
பள்ளிக்கு செல்லும் இளம் பெண்கள் தொடங்கி கல்லூரி, வேலை செல்லும் பெண்கள் கட்டாயம் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்:கழுத்து கருமை நீங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
இந்த நேரத்தில் உங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். 4-6 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்களை மாற்றி கொண்டே இருக்க வேண்டும். இதை செய்ய தவறினால் சிறுநீர் தொற்று மற்றும் எரிச்சல் பிரச்சனை அதிகரிக்கும். மாதவிடாய் நாட்களில் சோப்பு அல்லது பிறப்புறுப்பை சுத்தம் செய்யும் பிற பொருட்களை பயன்படுத்த கூடாது. இது உங்கள் பிறப்புறுப்புக்கு தீங்கு விளைவிக்கும். சாதாரண தண்ணீரை கொண்டே பிறப்புறுப்பை சுத்தம் செய்யலாம்.
மாதவிடாய் காலங்களில் உங்கள் பிறப்புறுப்பு, தொடைகள் மற்றும் கால்களில் இருக்கும் முடியை நீக்க வேக்சிங் அல்லது ஷேவிங் செய்யாதீர்கள். இது ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரித்து ஆபத்தை விளைவிக்கிறது. முடிந்தவரை உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். பிறப்புறுப்பை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்துக்கொள்ள வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம்.
அழுக்கு படர்ந்த உள்ளாடைகளால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுப்போன்ற நேரங்களில் காட்டன் உள்ளாடைகளை பயன்படுத்துங்கள். இது தோலுக்கும் நல்லது பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. அதிக ரத்தப்போக்கு காரணமாக பெண்கள் பலரும் ஒரே நேரத்தில் 2 நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். இது தவறான செயல். இப்படி செய்வதால் பிறப்புறுப்பின் வெப்பநிலையை அதிகரித்து தொற்று ஏற்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்:பாத வெடிப்பை சரிசெய்யும் வீட்டு வைத்தியம்
மாதவிடாய் காலங்களில் தினமும் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். தினமும் குளிப்பது உங்களை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் இந்த நேரத்தில் ஏற்படும் வயிறு வலி, முதுகுவலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com