herzindagi
image

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க வேண்டுமா; இந்த உணவுகளை அவசியம் சாப்பிடவும்

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் உணவுகளின் பட்டியல் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
Editorial
Updated:- 2025-12-13, 11:40 IST

இன்றைய சூழலில் பெரும்பாலானவர்கள் கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் பாதிக்கப்படுகின்றனர். அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால், இருதய நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. எனினும், நம்முடைய அன்றாட உணவு முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இதனை நாம் தடுக்க முடியும்.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் உணவுகள்:

 

அதன்படி, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் சில உணவுகள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இவற்றை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் நல்ல மாற்றத்தை காண முடியும்.

 

ஓட்ஸ்:

 

ஓட்ஸில் உள்ள கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் ஆப்பிள்கள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றில் இருந்தும் கரையும் நார்ச்சத்து உங்கள் உடலுக்குக் கிடைக்கிறது. இவற்றை ஒரு கலவையாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. தினமும் 5 முதல் 10 கிராம் கரையும் நார்ச்சத்தை உட்கொள்வது, உங்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு முறை ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் 3 முதல் 4 கிராம் வரை நார்ச்சத்து பெறலாம். ஓட்ஸின் சுவை பிடிக்காதவர்கள், வாழைப்பழம் அல்லது பெர்ரி பழங்கள் போன்ற கூடுதல் நார்ச்சத்துள்ள பழங்களை சேர்த்து சாப்பிடலாம்.

Oatmeal

 

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் 6 உணவுகள்; இவற்றை மிஸ் பண்ணாதீங்க மக்களே

 

மீன் வகைகள்:

 

சால்மன், மத்தி, டூனா போன்ற மீன்களில் நல்ல கொழுப்புகள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இந்த மீன்களை உண்பது, இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருதய நோய்களுக்கு காரணமான ட்ரை கிளிசரைடுகளை குறைக்க உதவுகின்றன. அதே நேரத்தில், அவை நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன. மீன் தவிர, வால்நட்ஸ், ஆளி விதைகள், ஆகியவற்றிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

மேலும் படிக்க: இருதய ஆரோக்கியம் முதல் உடல் எடை பராமரிப்பு வரை; சிறுதானியங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள்

 

விதை வகைகள்:

 

தினமும் ஒரு கைப்பிடி பாதாம் மற்றும் வால்நட்ஸ் போன்ற விதைகளை சாப்பிடுவது, உங்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. இவற்றில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் அன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை இருதயத்தை பாதுகாக்கும் சேர்மங்களாகும். இவற்றை சிற்றுண்டியாக சாப்பிடலாம். எனினும், இவற்றில் கலோரிகள் அதிகம் என்பதால், அவற்றை சிறு அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Nuts

 

சோயா சார்ந்த உணவுகள்:

 

டோஃபு, சோயா பால், சோயா நகட்ஸ் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற உணவுகளில் புரதம் நிறைந்துள்ளது. இந்த உணவுகள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். உங்கள் உணவில் இறைச்சி அல்லது பால் பொருட்களுக்கு பதிலாக சோயா சார்ந்த உணவுகளை பயன்படுத்துவது சில மாதங்களிலேயே உங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com