பெண்களுக்கு ஏற்படக்கூடிய கொடிய நோய்களில் ஒன்று தான் மார்பக புற்றுநோய். மற்ற நோய்களைக் கூட சில அறிகுறிகளை வைத்து எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் மார்பக புற்றுநோய் அதுப்போன்றில்லை. நம் உடலுக்கு உள்ளேளே படிப்படியாக வளர்ந்து நிலை முற்றும் போது தான் சில அறிகுறிகளை நமக்கு வெளிப்படுத்துகிறது. இதனாலே இறப்பு விகிதம் அதிகமாக ஏற்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த சூழலில் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த தகவல்கள் இதோ உங்களுக்காக..
மேலும் படிக்க : குளிர்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!
ஆரம்ப கட்டத்திலேயே மார்பக புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிய முடியாவிட்டாலும் சில அறிகுறிகள் உங்களுக்கு பாதிப்பின் தாக்கத்தை வெளிப்படுத்தும். மார்பு பகுதியில் ஏற்படும் மாற்றங்கள், முலைக்காம்பில் வீக்கம் மற்றும் வலி, மார்பகங்களில் திடீர் வீக்கம் மற்றும் வலி போன்றவையும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக உள்ளது. எனவே உடல் நலத்தில் எப்போதும் அக்கறையுடன் இருக்க வேண்டும்.
மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பொதுவாக உடல் சோர்வு, பசியின்மை, குமட்டல், அதீத வலி மற்றும் எடை போன்ற பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். இதற்கு முறையான சிகிச்சை மற்றும் ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
மார்பக புற்றுநோய் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அதிகப்படியான கொழுப்பு, எண்ணெய்கள் மற்றும் இனிப்புகள் அதிகம் உள்ள உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது உடலுக்கு எவ்வித ஊட்டச்சத்துக்களையும் வழங்காது. மாறாக தேவையில்லாத உடல் நலப்பாதிப்புகளைளும் உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால் தவிர்ப்பது நல்லது.
மேலும் படிக்க: பெண்கள் பாதுகாப்பாக இருக்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com