Women safety tips:பெண்கள் பாதுகாப்பாக இருக்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!

பெண்கள் எப்போதும் அதிகாரம் பெற்றவர்களாகவும், தம்மை சுற்றி நடக்கும் பிரச்சனைகளைக் கையாளும் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

women safety tips

பெண்கள் தான் நாட்டின் கண்கள் என்பார்கள். வீட்டின் முதுகெலும்பு என்றெல்லாம் புகழ்பாடுவார்கள். அதே சமயம் மற்றொருபுறம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரிக்கத்தான் செய்கிறது. சமீபத்திய தகவலின் படி, 3 பெண்கள் இருந்தால் அதில் ஒரு பெண்ணுக்காவது தங்களுடைய நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் பாலியல் தொல்லை ஏற்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அலுவலகப் பணிக்கு செல்லும் பெண்கள் முதல் பெண் குழந்தைகள் வரை பலரும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். இந்நேரத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்? என்பது குறித்த தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்.

working women

பெண்களுக்கான பாதுகாப்பு குறிப்புகள்:

திட்டமிடுதல்:

  • பெண்களாகிய நீங்கள் தனியாக அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்வதற்குத் திட்டம் வைத்திருந்தால் முறையானத் திட்டமிடுதலை முதலில் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் தனியாக செல்லும் போது, அவ்விடத்தில் உள்ள சுற்றுப்புறங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
  • உங்களுடன் பயணிக்காத பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் நீங்கள் தங்கியிருக்கும் இடம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். என்னவெல்லாம் திட்டம் வைத்துள்ளீர்கள்? என்பதையும் சொல்லும் போது நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்கள்.

ஸ்மார்ட்போன் பயன்பாடு:

  • இன்றைக்கு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தாதவர்கள் யாருமே இல்லை. அந்தளவிற்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அத்தியாவசிய ஒன்றாகிவிட்டது.
  • புகைப்படங்களை எடுப்பதற்கும், வாட்ஸ், இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களின் வாயிலாக செய்திகளை அனுப்புவதற்கான சிறந்த கருவியாக மட்டுமில்லாமல், பெண்களுக்கு உயிர்காக்கும் கருவியாகவும் ஸ்மார்ட்போன்கள் உள்ளது.
  • காவலன் செயலி உள்ளிட்ட பிற பாதுகாப்பு கருவிகளின் உதவியோடு, நீங்கள் பிரச்சனையில் சிக்கியிருக்கும் இடத்தை தெரிவிக்க பெண்களுக்கு அனுமதியளிக்கிறது. எனவே எப்போதும் பெண்கள் இதுப்போன்றவற்றைப் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.

தற்காப்புக்கருவிகள்:

  • ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் பணிகளுக்குச் செல்லக்கூடிய பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவசர காலங்களில் யாரும் உதவிக்கு வருவதற்கு முன்னதாக எப்போதும் சில தற்காப்புக் கருவிகளை உங்களது பைகளில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
  • குறிப்பாக பெப்பர் ஸ்ப்ரே, விசில், சிறிய கத்தி, ஒரு மினி ஃபளாஷ்லைட் போன்ற பொருள்களை எப்போது வெளியில் சென்றாலும் எடுத்துச் செல்வது நல்லது. ஒருவேளை மறந்திருந்தாலும் உங்களின் நகங்களையும், பற்களையும் ஆயுதமாகப் பயன்படுத்துங்கள்.
  • women safety spray

எல்லைகளை உருவாக்குதல்:

  • பெண்கள் தனியாகவோ அல்லது நண்பர்களுடன் குழுக்களாக சென்றாலும் உங்களுக்கான எல்லைகளை அமைத்துக் கொள்ளுங்கள். உங்களுடன் வருபவர்களால் கூட உங்களுக்கு அசௌகரியமாக சூழல் ஏற்படலாம். எனவே உங்களுக்கும் தனிநபருக்கும் இடையில் எப்போதும் சிறிய தூரம் வேண்டும்.

மனரீதியாக வலுப்பெறுதல்:

பெண்களுக்கு எப்போது? யாரால்? பிரச்சனைகள் வரக்கூடும் என்பது தெரியாது. எனவே எந்தவொரு ஆபத்தான சூழ்நிலையிலும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். அந்த சூழலிலும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெண்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க:யாருகிட்டயும் இந்த கிஃப்ட்ஸ் வாங்காதீங்க ! மக்களே உஷார்

இதுப்போன்ற அடிப்படை பாதுகாப்பு வழிமுறைகளை பெண்கள் ஒவ்வொருவரும் பின்பற்றினாலே குற்றங்கள் ஓரளவிற்கு குறையக்கூடும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP