கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரக்கூடிய காலம் என்றாலும் பெரும் சவால்களையும் அவர்கள் சந்திக்க வேண்டும். 9 மாதங்கள் கருவில் இருக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்க்கும் பொறுப்புள்ள பெண்கள் அனைவரும் கட்டாயம் தங்களுடைய உடல் நலத்திலும் அக்கறையோடு இருக்க வேண்டும்.
வெயில் காலங்களை விட குளிர்காலங்கள் தான் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் சவாலானக் காலக்கட்டம். இதைச் சமாளிக்க என்னென்ன வழிமுறைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா? இதோ இங்கே தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்…
மேலும் படிங்க: சளி, இருமல் தொல்லைக்கு உடனடி தீர்வளிக்கும் பாட்டி வைத்தியம்!
குளிர்காலத்தில் அதிக வியர்வை எதுவும் வெளிவராததால் தாகம் குறைவாக இருக்கும். தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக குளிர்ச்சியான சூழல் ம்ற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைவதோடு உடல் சோர்வடையும். வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய உணவு முறையில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாகப் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சுண்டல், பாசிப்பருப்பு உள்ளிட்ட பருப்பு மற்றும் பயறு வகைகளையும் சாப்பிடுவது நல்லது.
கர்ப்பக் காலங்களில் பெரும்பாலான பெண்களுக்கு நீரழிவு நோய் ஏற்படும் என்பதால், அதிக சர்க்கரை உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
மழை மற்றும் குளிர் காற்றினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும். கர்ப்பிணிப் பெண்களுக்கு எளிதில் நோய் தாக்குதல் ஏற்படும் என்பதால் தவறாமல் தடுப்பூசிகளைப் போட வேண்டும். வைரஸ் தாக்குதலிருந்து நம்மைப் பாதுகாப்பதோடு வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதுகாப்பான அமையும்.
வழக்கமான மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள மறந்துவிடக்கூடாது.
வைரஸ் தொற்று பாதிப்புள்ளவர்களிடம் விலகி இருப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிக உடல் சோர்வு ஏற்படும். எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். இது முற்றிலும் தவறான செயல். உங்களையும் வயிற்றில் உள்ள குழந்தைகளையும் எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உங்களால் குளிர்காலத்தில் வெளியில் சென்று உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றாலும், வீட்டிற்கு உள்ளேயே நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்வது நல்லது.
பொதுவாகவே கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களுக்கு பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். குளிர்காலத்தில் வழக்கத்தை விட தோல் அரிப்பு, முகப்பரு, முகம் வறண்டு விடுதல், உதடு வெடிப்பு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும். மாய்ஸ்சரைசைர்களை உபயோகிப்பது பாதிப்பைக் கொஞ்சம் தணிக்கும்.
குளிர்காலத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பாக தண்ணீரை சூடேற்றி குளிப்பது நல்லது.
மேலும் படிங்க: மழைக்காலங்களில் உடல் சோர்வாகிறதா? காரணம் இது தான்!
குளிர்காலத்தில் உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க ஜர்கின், ஸ்வெட்டர், மப்புலர் போன்ற பாதுகாப்பாக ஆடைகளை அணிய வேண்டும்.
எப்போது வெளியில் சென்றாலும் குளிர்கால ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
கர்ப்ப காலத்தில் நிலவும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வினால் வெறுப்பான மனநிலையை அனுபவிப்பார்கள். தீடிரென கோபம், விரக்தி, உடல் சோர்வு போன்றவை ஏற்படுவது இயல்பு.
இந்நேரத்தில் உங்களுக்கு விருப்பமானவர்களும் பேசியும், சந்தித்தும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். இது உங்களுக்கு மட்டுமில்லை வயிற்றில் உள்ள உங்களது குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியான மனநிலையைக் கொடுக்கும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com