அதிகரிக்கும் மன அழுத்தம்; 5 நிமிடத்தில் குறைப்பதற்கான வழிமுறைகள்!

மன அழுத்தத்தில் இருக்கும் போது, ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது, உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு, உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு முக்கியமானதாக அமையும். 

stress in women life
stress in women life

மன அழுத்தம் என்ற வார்த்தையை சமீப காலங்களாக நம்மில் பலர் அடிக்கடி பயன்படுத்தி இருப்போம். குடும்ப சூழல், பணிச்சுமை, அலுவலக நெருக்கடி, கடன் சுமை போன்ற பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பான ஒன்று என்றாலும், கவனிக்க தவறினால் பல்வேறு உடல் நல பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும். இதோடு மட்டுமின்றி மன அழுத்தம் உங்கள் மனநிலையையும், உங்களது நாளையும் பாதிப்பதோடு மக்களுடனான உறவுகளையும் சீர்குலைக்கும். எனவே மன அழுத்தத்தை விரைவாக எப்படி குறைக்க வேண்டும்? என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

stress in life

மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகள்:

  • தண்ணீர் அருந்துதல்:மன அழுத்தத்தில் இருக்கும் போது, ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது, உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு, உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு முக்கியமானதாக அமையும். இதனால் தான் நாம் கடும் கோபத்திலும், பதட்டத்திலும் இருக்கும் போது கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு பேசுங்கள் என்பார்கள். இவ்வாறு நீங்கள் மேற்கொள்ளும் பொது மன அழுத்த அளவை கணிசமாக குறைப்பதோடு சோர்வு ஏற்படுவதையும் தடுக்கிறது.
  • சுவாச பயிற்சி: கோபமும், பதட்டமும் தான் பல நேரங்களில் மன அழுத்தத்திற்கான முக்கிய காரணங்களாக அமையும். எனவே இந்நேரத்தில் சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளவும். மூக்கின் வழியாக மூச்சை ஆழமாக உள்ளிழுத்து சில வினாடிகள் அப்படியே வைத்து பின்னர் மூச்சை விடவும்.. இது சுவாச நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதோடு, நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
  • பாடல் கேட்டல்: மனம் எப்போதும் கஷ்டமாக இருக்கும் போது பலரின் ஆறுதல் இளையராஜா அல்லது பிடித்த இசையமைப்பாளர்களின் பாடல்களாகத் தான் இருக்கும். ஆம் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சக்தி வாயந்த கருவியாக உள்ளது பாடல்களைக் கேட்பது. தனிமையில் இருக்கும் போது அல்லது மனச்சோர்வுடன் இருக்கும் போது பிடித்த பாடல்களைக் கேட்கவும். என்ன தான் பலரால் இடையூறுகள் ஏற்பட்டால் சட்டென்று மறைந்துவிட உதவியாக இருக்கும்.
Music listening
  • ஆசனம் செய்தல்: மன நிலையை மேம்படுத்த குழந்தைகள் எப்படி கால் மற்றும் கைகளை மடக்கி தவழ்வது போன்று அமர்வார்களோ? அதே போன்று தரையில் மண்டியிட்டு உட்காரவும். இத்தகைய செயல்களை நீங்கள் மேற்கொள்ளும் போது மனதை ஒருநிலைப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவியாக உள்ளது.
  • நடைபயிற்சியில் ஈடுபடுதல்: நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவதால் மன உளைச்சல் ஏற்படும். எனவே ஒவ்வொரு மணி நேரமும் அல்லது ஒரு நாளைக்கு 4-5 முறை நடைபயிற்சி மேற்கொள்ளவும். புதிய காற்று, சூரிய ஒளி போன்றவை உடல் நலத்தைப் பாதுகாக்கும்.
  • நினைவாற்றலை மேம்படுத்துதல்: தியானம் மற்றும் மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட நிவாரணம் அளிக்கும் அதே வேளையில், நறுமண சிகிச்சையும் உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்கும். நினைவாற்றலைப் பயிற்சி செய்ய சில நிமிடங்கள் எடுத்துக்கொள்வது மன அழுத்த எண்ணங்களிலிருந்து விடுபட உதவியாக இருக்கும். எனவே கண்களை மூடி, உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள், இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் பதட்டத்தை குறைத்து அமைதியான மனநிலையை பெற முடியும்.
stress free life

இது போன்ற நடைமுறைகளில் உங்களால் எது மேற்கொள்ள முடியுமா? அதை செய்யுங்கள். நிச்சயம் 5 நிமிடங்களில் உங்களது மன அழுத்தத்தைக் கட்டாயம் குறைத்துவிட முடியும்.

Image Source- Google

Image Source- Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP