Vaginal Health: பெண்ணுறுப்பு ஆரோக்கியத்திற்கான உணவுகள் இது தான்!

அன்றாட உணவுமுறையில் ஆரோக்கியமான உணவுப்பொருள்களைச் சேர்த்துக் கொண்டாலும், பிறப்புறுப்பு ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும்.

foods to vaginal health
foods to vaginal health

பெண்கள் சருமத்தைப் பராமரிப்பதை விட அதிகளவு அக்கறையுடனும், கவனத்துடன் பெண்ணுறுப்பைப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் பாக்டீரியா தொற்றுகள் வேகமாக பரவி பெண்ணுறுப்பு பகுதியில் அரிப்பு, அலர்ஜி, தொடை பகுதியில் வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக பல நேரங்களில் சிறுநீர் பாதை தொற்று எளிதில் ஏற்படும் பெண்ணுறுப்பு சுகாதாரமின்மை ஒரு காரணமாக அமையக்கூடும். எனவே தான் பெண்களின் அந்தரங்க பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பெண்களுக்கு சுகாதாரமின்மை, பாக்டீரிய தொற்று போன்றவற்றால் பெண்ணுறுப்பு பாதிக்கப்படுகிறது. இதோடு மட்டுமின்றி பெண்ணுறுப்பின் PH அளவானது சமநிலையில் இல்லையென்றாலும் பிறப்புறுப்பு பாதிப்பு ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு PH அளவானது 3.8 முதல் 4.5 அளவில் இருக்க வேண்டும். இல்லையென்றால் அரிப்பு, அலர்ஜி போன்ற பாதிப்புகளைப் பெண்களுக்கு ஏற்படுத்தும் என்பதால் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் பெண்களின் பிறப்புறுப்பை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் அவர்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோ அதன் லிஸ்ட் உங்களுக்காக..

vaginal itching

பிறப்புறுப்பைப் பாதுகாக்கும் உணவுகள்

  • பச்சை இலை காய்கறிகள்: வைட்டமின்கள், இரும்புச்சத்து. புரோட்டீன் நிறைந்த பச்சை இலை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளைப் பெண்கள் அதிகளவில் தங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தை சுத்திகரிப்பதோடு, பிறப்புறப்பில் ஏற்படக்கூடிய தொற்றுகளையும் தடுக்கிறது. குறிப்பாக கீரையில் உள்ள வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய வறட்சி, அரிப்பு போன்றவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவியாக உள்ளது.
  • தயிர்: தயிர், மோர் போன்ற புளித்த உணவுகளில் புரோபயோடிகள் அதிகளவில் உள்ளது. எனவே இது உங்களது PH அளவை சமன் செய்து தொற்று பாதிப்பைத் தடுக்கிறது. ஒருவேளை தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால் படிப்படியாக குறைக்கவும் இந்த உணவுகள் பெண்களுக்கு உதவியாக இருக்கும்.
  • ஆப்பிள்: இதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன், புளோரிட்ஜன் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஊட்டச்சத்துக்கள் பெண்கள் தங்களது உணவு முறையில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது ஆப்பிள் சாப்பிடும் போது, பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய தொற்றுகளைக் குணப்படுத்த உதவியாக உள்ளது. மேலும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதே போன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு, அவகோடா, மற்றும் பல்வேறு வைட்டமின்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
health foods

இவ்வாறு பெண்கள் தங்களது அன்றாட உணவுமுறையில் ஆரோக்கியமான உணவுப்பொருள்களைச் சேர்த்துக் கொண்டாலும், பிறப்புறுப்பு ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும். பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தம் செய்தல், உள்ளாடைகளை நன்கு சுடு தண்ணீரில் அலசி உபயோகித்தல் போன்ற அடிப்படை விஷயங்களைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP