herzindagi
Joint pain home remedies oil

Garlic Oil: மூட்டு வலியை அடியோடு விரட்டும் பூண்டு எண்ணெய்

மூட்டு வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் மத்தியிலும் இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. பூண்டு எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும்
Editorial
Updated:- 2024-07-04, 19:03 IST

தற்போது மூட்டுவலி என்பது பலரின் பிரச்சனையாக மாறிவிட்டது. மூட்டு வலி முதியவர்களை மட்டுமல்ல இளைஞர்களையும் தொந்தரவு செய்கிறது. மூட்டு வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் மூட்டு வலி பொதுவானதாக இருந்து வருகிறது. ஆனால் சில சமயங்களில் மூட்டுவலியால் ஏற்படும் பிரச்னை அதிகமாகி, எழுந்து உட்கார்ந்து அன்றாட வேலைகளைச் செய்வதற்கே சிரமமாகிவிடும். மூட்டுவலிக்கு மருந்தகங்களில் வாங்க வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் பாட்டி பரிந்துரைக்கும் பிரத்யேக எண்ணெய் பற்றி பார்க்கலாம். இதுகுறித்து ஹார்மோன் மற்றும் யோகா பயிற்சியாளர் நடாஷா கபூர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: விளாம்பழம் இலைகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைள்

மூட்டு வலியைப் போக்க இந்த வீட்டு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யவும் 

joint pain  inside

  • கடுகு எண்ணெயுடன் தினமும் மசாஜ் செய்வது மூட்டு மற்றும் தசை வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • இந்த எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
  • இது மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கிறது.
  • வைட்டமின் ஈ மற்றும் செலினியம் போன்ற சத்துக்களும் இதில் உள்ளதால் மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
  • ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், சல்பர் மற்றும் அலிசம் ஆகியவை பூண்டில் காணப்படுகின்றன. இது வலியைக் குறைக்கிறது.
  • பூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்தது மற்றும் வெப்பமயமாதல் விளைவைக் கொண்டுள்ளது. இது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

பூண்டு எண்ணெய் தயாரிக்கும் முறை

joint pain new inside

  • இதற்கு கடுகு எண்ணெய் மற்றும் பூண்டு, கிராம்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் கடுகு எண்ணெய் ஊற்றி அதில் 8-10 பல் பூண்டு சேர்க்கவும்.
  • இப்போது நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதனை மெல்லிய சூட்டில் வைத்து செய்ய வேண்டும்
  • பூண்டு கருப்பாக மாறியதும் கிராம்பை இதில் சேர்த்து சிறிது நேரம் அப்படியே விடவும்.
  • இப்போது இந்த எண்ணெயைக் கொண்டு மூட்டுகளை மசாஜ் செய்யவும்.
  • இதை தினமும் தூங்கும் முன் செய்து வந்தால் சில நாட்களில் நிவாரணம் பெறலாம்.
  • மசாஜ் செய்வதற்கு முன் எண்ணெயை சிறிது சூடாக்கி வந்தால் அதிக பலன்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க: ஒரு சிட்டிகை மஞ்சள் சாப்பிட்டால் உடலில் நிகழும் அற்பு மாற்றங்கள்

மூட்டு வலியைப் போக்க பாட்டி சொன்ன இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யவும். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க  Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com