Ear Pain: குளிர்காலத்தில் காது வலி ஏன் ஏற்படுகிறது? எப்படி சரி செய்வது?

காதுவலியை சரி செய்ய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வெளியில் செல்லும் போது காதுகளை மப்புலர் கொண்டு நன்றாக மூடிக் கொள்ள வேண்டும்.

tips to prevent ear pain

மார்கழி மற்றும் தை மாதங்களில் குளிர் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்தாண்டு வழக்கத்தை விட குளிர் வாட்டி வதைக்கிறது. இது சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் போன்ற பருவ கால தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும் சமீப காலங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது காது வலி. அதிலும் அடிக்கின்ற குளிர்காற்று காதுகளுக்குள் செல்லும் போது வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பலர் மருத்துவமனைகளை நாடுகின்றனர்.

problem of ear pain

குளிர்காலத்தில் ஏன் காது வலி ஏற்படுகிறது?

வெயில் காலங்களை விட குளிர்காலத்தில் காது வலி பாதிப்பு பலருக்கும் ஏற்படுகிறது. நமது காதுகளையும், மூக்கையும் யூஸ்டேஷியன் குழாய் இணைக்கிறதாம். குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று மூக்கின் வலியாகவும், காதுகளின் வழியாகவும் உள்ளே செல்லும் போது இந்த குழாய்கள் மூடிக்கொண்டு காதின் சவ்வுகள் இழுக்கப்படுவதால் வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குளிர்காலத்தில் காதுகளுக்குள் குளிர்ந்த காற்று போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். இதை நாம் தவிர விடும் போது காதுகளில் புண்கள் ஏற்பட்டு அனுபவிக்க முடியாத வலியை நாம் சந்திக்க நேரிடும். மேலும் காதுகளில் நீர் மற்றும் சீல் வருதல், காது சவ்வுகளில் புண் போன்ற பாதிப்புகளையெல்லாம் சந்திக்க நேரிடும். ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாவிடில் காது கேளான்மை பிரச்சனையாலும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

காது வலிக்கானத் தீர்வு என்ன?

  • குளிர்காலத்தில் ஏற்படும் காதுவலி பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என்றால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றாலும், வீட்டிற்குள் இருந்தாலும் காதுகளை நன்றாக மூடி கொள்ள வேண்டும்.
  • சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
  • குளிர்காலத்தில் வெளியில் சென்று வந்தவுடன் நொச்சி,வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை இலைகள் போன்ற கிருமிநாசினிகளைக் கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் காதுகளில் உள்ள பாக்டீரியா தொற்றுகளை நீக்கி வலியைக் குறைக்கக்கூடும்.
  • காது வலியைக் குறைப்பதற்கு ஐஸ் கட்டிகள் அல்லது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு வலி இருக்கும் இடங்களில் ஒத்தனம் வைக்க வேண்டும்.
  • இயற்கையான முறையில் காது வலியைக் குணமாக்க வேண்டும் என்றால் பூண்டு உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் வறுத்த பூண்டு அல்லது பச்சை பூண்டு சாப்பிடலாம். ஒருவேளை ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சாப்பிடுவது நல்லது.

மேலும் படிங்க:பெண்களின் முகத்தைப் பொலிவாக்க உதவும் கிவி பழம்..!

எந்த காதில் வலி இருக்கிறதோ? அந்த பக்கம் திரும்பி படுக்க வேண்டும். மசாஜ் செய்வது லேசாக அழுத்தம் கொடுக்கும் போது வலி குறையக்கூடும். இஞ்சி சாறு எடுத்து காது மடல்களில் அப்ளை செய்யவும். இதில் ளஉள்ள ஊட்டச்சத்துக்கள் வலி நிவாரணியாக செயல்படுகிறது. அதற்கென்று காதுகளில் நேரடியாக ஊற்றக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image credit: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP