herzindagi
skin glowing for kiwi fruiy

Kiwi Fruit:பெண்களின் முகத்தைப் பொலிவாக்க உதவும் கிவி பழம்..!

<span style="text-align: justify;">இயற்கையான முறையில் சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்றால் உங்களுக்கு சிறந்த தேர்வாக கிவி பழங்கள் அமையக்கூடும்</span>
Editorial
Updated:- 2024-01-30, 20:42 IST

பெண்கள் எப்போதுமே தங்களின் முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. பலர் வீடுகளில் உள்ள மஞ்சள், கடலை மாவு, பாசிப்பயறு போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். ஒரு சிலர் அழகு நிலையங்களுக்கு செல்வதுண்டு. இவ்வாறு பெண்கள் தங்களது முகங்களைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் பழங்களும் முக பராமரிப்பு பேருதவியாக உள்ளது. இதோ இன்றைக்கு கிவி பழம் எப்படி பெண்களின் சரும பராமரிப்பிற்கு உதவியாக உள்ளது? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

kiwi for skin glowing

சரும பராமரிப்பிற்கு உதவும் கிவி: 

  • கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. இளம் வயதிலேயே சிலருக்கு வயதான தோற்றம் ஏற்படக்கூடும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், கிவி பழங்களை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை அதிகரித்து வயதான அறிகுறிகளை மாற்றுகிறது.
  • கிவியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. மேலும் சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கி புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் உதவியாக உள்ளது.

மேலும் படிங்க: பெண்களே..சேலையில் ஒல்லியாக தெரியலேன்னு கவலையா? நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

  • இயற்கையான முறையில் சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்றால் உங்களுக்கு சிறந்த தேர்வாக கிவி பழங்கள் அமையக்கூடும். இதில் வைட்டமின் சி பண்புகள் அதிகளவில் உள்ளதால் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்கிறது. 
  • சருமத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி சருமத்திற்கு தேவையான ஊட்டமளித்து, சீரான சருமத்தைத் தருவதற்கு உதவியாக உள்ளது.
  • அதிக நீர்ச்சத்துக்கள் கிவியில் அடங்கியுள்ளதால் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கிவி பழ சாறு எடுத்து முகத்தில் அப்ளே செய்யவும். 
  • முகத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்க வேண்டும் என்றால், கிவி பழங்களை கட்டாயம் தேர்வு செய்துக் கொள்ளவும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் முக்கிய வைட்டமின்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது. 

kiwi fruit

  • பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் முக்கிய வைட்டமின்கள் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. இது முகத்தில் உள்ள மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைவாக கவனிக்க வைக்கிறது, இது உங்கள் சருமத்திற்கு இளமை மற்றும் கதிரியக்க தோற்றத்தை அளிக்கிறது.
  • முகத்தில் உள்ள பருக்களை சரி செய்ய வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த கிவி பழங்களைச் சாப்பிட வேண்டும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவியாக இருக்கும்.

 மேலும் படிங்க: முதல் முறை புடவைக் கட்டும் பெண்கள் கவனத்திற்கு!

பெண்கள் தங்களது சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்றால், இனிவரும் காலங்களில் கிவி பழங்களை ஜூஸ் அல்லது சாலட்டாக உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Image credit: Freepik

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com