Menopause: மாதவிடாய் நிற்கும் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்!

பொதுவாக 40 வயது முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மாதவிடாய் முடிவுக்கு வரக்கூடும். 

menopause for women

பெண்களின் வாழ்க்கையில் வயதுக்கு ஏற்ப ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படக்கூடும். இதற்கேற்றார் போல் ஆண்களை விட பெண்களின் உடல் அமைப்பு வலுவாக இருக்கும். குறிப்பாக மாதம் மாதம் வரக்கூடிய மாதவிடாய் சுழற்சி பெண்களின் வாழ்வில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும். மேலும் பெண்களுக்கு 28 நாள்கள் சுழற்சி முறையில் வரவில்லை என்றால் பெண்கள் உடல் ரீதியாக பல மாற்றங்களை சந்திப்பார்கள். அதிலும் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் சுழற்சி முடிவுக்கு வருவதை ஆரம்ப கால அறிகுறிகளின் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும். இதோ என்னென்ன அறிகுறிகள்? எந்த வயதில் மெனோபாஸ் நிற்கும்? என்பது குறித்த விபரங்களை இங்கே அறிந்துக் கொள்வோம்.

மேலும் படிங்க:symptoms of menopause

மெனொபாஸின் அறிகுறிகள்:

  • பொதுவாக 40 வயது முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மாதவிடாய் முடிவுக்கு வரக்கூடும். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் வரவில்லை என்றால் அந்த பெண் மெனோபாஸ் அடைந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதோடு சில அறிகுறிகளையும் பெண்கள் சந்திக்க நேரிடும். மாதவிடாய் நிறுத்தம் கருப்பை ஃபோலிகுலர் செயல்பாடு இழப்பு மற்றும் இரத்த்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ஏற்படுகிறது.
  • மாதவிடாய் நிற்கும் போது ஹாட் ப்ளஷஸ் எனப்படும் முகம், கழுத்து, மார்பு பகுதியில் திடீர் வெப்பத்தை உணர்வார்கள். பெண்களுக்கு பிறப்புறுப்பில் உலர்த்தன்மை, தோல் கருப்பாகுதல், தலைவலி மற்றும் அதீத முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளைச் சந்திப்பார்கள்.
  • மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் சமயத்தில், முறையற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. குறிப்பாக சில சமயங்களில் பெண்களுக்கு ஒரே மாதத்தில் இரண்டிற்கு மேற்பட்ட முறை மாதவிடாய் வரக்கூடும். அதிலும் அதீத இரத்தப்போக்கு மற்றும் வலியுடன் இருக்கும்.
  • முறையற்ற மாதவிடாய் பிரச்சனைகளை முறையாக கவனிக்காவிடில், ரத்த சோகை, இதய நோய் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.
  • ஆண்களை விட பெண்கள் அதிகமாக வேலை செய்வதால் வியர்வை அடிக்கடி வெளியேறக்கூடும். வேலை செய்யும் போது ஏற்படக்கூடிய வியர்வை சாதாரணமானது. அதே சமயம் எந்த வேலையையும் செய்யாமல் இருக்கும் போது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவதும் மாதவிடாய் நிற்றலின் அறிகுறிகளாக உள்ளது.
  • மெனோபாஸ் அதாவது மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு தூக்கமின்மை பெரும் பிரச்சனையாக அமையக்கூடும்.

manopause treatment

பொதுவாக மெனோபாஸ் பெரிமெனோபாஸ், மெனோபாஸ் மற்றும் பிந்தைய மாதவிடாய் என மூன்று அடிப்படை நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்த நேரத்தில், கருப்பைகள் மாதவிடாய் சுழற்சியை தூண்டும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் உற்பத்தியில் சரிவை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 40 முதல் 55 வயது தான் மெனொபாஸ் நிற்பதற்கான சரியான வயது. 40 வயதிற்கு முன்னதாக மாதவிடாய் நிற்கும் போது உடல் ரீதியாக பல பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடும். எனவே முறையான மருத்துவ சிகிச்சை வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image credit:Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP