
முக்கியமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பிறகு, திடீரென மாதவிடாய் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு இருக்கிறீர்களா? அனேகமாக அனைத்து பெண்களுமே இந்த பிரச்சனையை சந்தித்து இருக்க கூடும். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் நீங்கள் நினைத்தால் உங்கள் மாதவிடாய் சுழற்சி காலத்தை முன்கூட்டியோ அல்லது தள்ளி வைத்தோ மாற்றி அமைத்து கொள்ள முடியும்.

வளைதளத்தில் எக்கச்சக்கமான கூற்றுகள் இருக்கின்றன. இயற்கை பொருட்களை பயன்படுத்தினால், அதாவது ஒரு குறிப்பிட்ட பழமோ அல்லது ஆப்பிள் வினிகரோ உட்கொண்டால் நம் மாதவிடாய் சுழற்சி காலத்தை நாம் நினைத்தபடி மாற்றி அமைத்து கொள்ளலாம் என்பது பலரின் கூற்று.
பப்பாளி, மாதுளை சாறு அல்லது எள்ளு இவற்றை சாப்பிட்டால் மாதவிடாய் முன்கூட்டியே வந்து விடும் என்றும் ஆப்பிள் சைடர் வினிகர் குடித்தால் மாதவிடாய் தள்ளி போகும் என்றும் பல கூற்றுகள் உள்ளன. இது போன்ற கூற்றுக்கள் உண்மையா என்று இது வரை நிரூபிக்கப்படவில்லை.
இதுவும் உதவலாம்:மாதவிடாய் வலியைப் போக்கும் ஆயுர்வேத ரெசிபி!!
டாக்டர். வர்ஷினி கூறுவதாவது, "மருத்துவ மற்றும் விஞ்ஞான முறைப்படி பார்த்தால், மகப்பேறு மருத்துவர் பரிந்துரைப்படி, நீங்கள் சில மருந்துகளை உட்கொண்டு வர, நீங்கள் நினைத்தபடி உங்கள் மாதவிடாய் சுழற்சி காலத்தை மாற்றி முன்கூட்டியோ அல்லது தள்ளியோ வர வைக்கலாம்.
ஆனால் இதை பற்றி சில வதந்திகளாக வரும் கருத்து என்னவென்றால், இது போன்ற மருந்துகளை எடுத்துக் கொண்டால், அது அடுத்து வர போகும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்க கூடும், மேலும் அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்பது தான். இந்த கூற்றுகள் அனைத்தும் உண்மை அல்ல. அவசர காலத்திற்கு இந்த மருத்துவத்தை நீங்கள் மேற்கொள்ளலாம். இது உங்களின் சராசரி மாதவிடாய் சுழற்சியை பாதிக்காது. இது குறிப்பிட்ட ஒரே ஒரு சுழற்சி காலத்தை மட்டுமே பாதிக்கும். ஆனால் இது மருத்துவர் பரிந்துரைப்படி மட்டும் தான் மேற்கொள்ள வேண்டும்.

பலவிதமான காரணிகள் நம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது. மனவுளைச்சல், உடற்பயிற்சி மற்றும் வேறு சில விஷயங்களுடன் வெவ்வேறு ஹார்மோன்கள் சேர்ந்து நம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும். எனவே உங்களுக்கு முன்கூட்டியோ அல்லது மாதவிடாய் தள்ளி வருகிறதென்றால் வெவ்வேறு விஷயங்கள் உங்கள் மாதவிடாயின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது தான் காரணம்.
இதுவும் உதவலாம்:சீரற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு இந்த ஒரு பானம் போதும்
அதனால் நீங்கள் உங்கள் மாதவிடாய் சுழற்சி காலம் வராமல் போனாலோ, தள்ளி போனாலோ அல்லது முன்னரே வந்தாலோ ஒரு மகப்பேறு நிபுணரை நிச்சயம் கலந்து ஆலோசிக்க வேண்டியது மிக மிக அவசியம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com