மாதவிடாய் வலியைப் போக்கும் ஆயுர்வேத ரெசிபி!!

மாதவிடாய் வலியை மருந்துகளின்றி இயற்கையான முறையில் சரி செய்ய வேண்டுமா? அதற்கான ஆயுர்வேத தீர்வை அறிவோம் வாருங்கள்.

menstrual pain remedies

மாதவிடாய் வருவதற்கு ஒரு சில நாட்கள் முன்னதாகவே அதன் அறிகுறிகள் தொடங்கிவிடும். ஒரு சிலருக்கு மாதவிடாயின் போது லேசான அசௌகரியங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய், வலி நிறைந்ததாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மாதவிடாயின் தொடக்கத்தில் வலி அதிகமாகவே இருக்கும். இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக ஒரு சிலர் மருந்துகளையும் எடுத்துக்கொள்கின்றனர். இயற்கையான முறையில் மாதவிடாய் வலியைக் குறைக்க விரும்பினால் இந்தப் பதிவை முழுமையாகப் படியுங்கள். உங்கள் பிரச்சனைக்கான ஆயுர்வேத தீர்வையும் தெரிந்துகொள்ளுங்கள்.

மாதவிடாயின் போது, உங்கள் கருப்பையகம் உதிர்ந்து வெளியேறுகிறது. இந்த நாட்களில் வலி, உப்புசம், குமட்டல் ஆகியவற்றுடன் கருப்பையில் ஏற்படும் சுருக்கங்களால் அடிவயிற்றில் தசை பிடிப்புகளும் ஏற்படுகின்றன. இதனுடன் கீழ் முதுகு, இடுப்பு மற்றும் தொடைகளின் மேல் பகுதிகளிலும் வலி பரவுகிறது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒரு சிலருக்கு தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அரிய அறிகுறிகளும் காணப்படுகின்றன.

period cramp

மாதந்தோறும் ஏற்படும் அதிகப்படியான வலி மற்றும் தசை பிடிப்புகளிலிருந்து விடுபட, அதற்கான தீர்வை ஆயுர்வேத நிபுணர் ஜீதுஞ்சந்தன் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வோம். மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும் ஒரு சிற்றுண்டியை நம்முடன் பகிர்ந்து உள்ளார். எள் மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சிற்றுண்டியை மாதவிடாய் சுழற்சியின் லூட்டல் கட்டத்தில் (அடுத்த மாதவிடாய் சுழற்சிக்கு 15 நாட்களுக்கு முன்பு) சாப்பிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது இதன் செய்முறையை விரிவாகப் பார்க்கலாம்.

மாதவிடாய் வலியைப் போக்கும் ஆயுர்வேத ரெசிபி

தேவையான பொருட்கள்

  • பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன்
  • வறுத்த எள் - 1 டேபிள் டீஸ்பூன்

செய்முறை

  • இதற்கு முதலில் எள்ளை மிதமான சூட்டில் வறுக்கவும்.
  • பிறகு இதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து கலக்கவும்.
  • இதிலிருந்து 1 ஸ்பூன் எடுத்து சாப்பிடவும்.

மாதவிடாய் நாட்களில் எள்

period cramp

  • மாதவிடாயின்போது ஏற்படும் வலியைப் போக்க எள் உட்கொள்ளலாம், ஆனால் அவை உங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.
  • எள்ளில் நிறைந்துள்ள லிக்னின், உடலில் அதிகப்படியான ஹார்மோன்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. இந்த காரணத்தினால் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் பெற எள் சாப்பிடலாம்.
  • மாதவிடாயை ஒழுங்கு படுத்துவதோடு, அந்த நாட்களில் ஏற்படும் வலியையும் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வலியால் ஏற்படும் அழுத்தத்தையும் தவிர்க்கலாம்.
  • மாதவிடாய் நாட்களில் எள் எடுத்துக் கொள்ளும்போது உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெறலாம்.

மாதவிடாய் நாட்களில் வெல்லம்

period cramp

  • சர்க்கரையை தவிர்க்க நினைப்பவர்களுக்கு வெல்லம் ஒரு ஆரோக்கியமான தேர்வாகும். அது மட்டுமின்றி மாதவிடாயை சீராக்குவதிலும் இது நன்மை பயக்கிறது. உடல் சூட்டை அதிகரிக்கும் பொருட்களான எள் அல்லது ஓமத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிடும்போது கருப்பை சுருக்கம் அதிகரித்து மாதவிடாய் சுழற்சி ஆரம்பமாகலாம்.
  • வெல்லத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். இது அழற்சி எதிர்ப்பு மற்றும் வலியைக் குறைக்கும் பண்பான ஆன்டி- ஸ்பாஸ்மோடிக் பண்புகளையும் கொண்டுள்ளது, இது மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது. இயற்கையான முறையில், உங்கள் சுழற்சிக்கு முன்னதாகவே மாதவிடாய் வர வேண்டுமெனில், வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் மற்றும் தேன் கலந்து குடிக்கவும். இதனை மாதவிடாய் வரும் வரை தினமும் குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாயின்போது பெண்கள் இவற்றை எல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்!!!



மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் பெற இந்த ஆயுர்வேத தீர்வை முயற்சி செய்து பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP