herzindagi
irregular periods in tamil

Tips for Irregular Periods in Tamil: சீரற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு இந்த ஒரு பானம் போதும்

கருப்பை நீர்க்கட்டிகள் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்று வரும். இந்த கட்டுரையில் அதை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். <div>&nbsp;</div>
Expert
Updated:- 2023-01-20, 08:00 IST

நீர்க்கட்டி பிரச்சனை என்பது கருமுட்டை சம்பந்தப்பட்டது. இதனால் ஹார்மோனின் சமநிலையற்ற தன்மை பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஏற்படுத்துகிறது. மாதவிடாய் சுழற்சி முறை சீர் இல்லாமல் முற்றிலும் மாரி கால தாமதமாக வருகிறது.

இந்த ஒரு பிரச்சனை தான் நமக்கு மேலும் பல பிரச்சனைகளையும், வியாதிகளையும் உருவாக்குகிறது. ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு மாதவிடாயின் தவறான அறிகுறி தென்படுகிறதா? இதை தவிர்க்க வேண்டும் என்றால், சிகிச்சை அவசியம் தேவை. அதே நேரத்தில் வாழ்கை முறை மாற்றம், ஆரோக்கியமான உணவு மற்றும் குடிக்கும் பானத்தில் கவனம் செலுத்தினால் சீரற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்ய முடியும்.

இதுவும் உதவலாம்:மாதவிடாய் வலியைப் போக்கும் ஆயுர்வேத ரெசிபி!!

period drink in tamil

ஆயுர்வேத டாக்டர். தீக்ஷா பவ்சர் தன் இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ஹார்மோன் மாத்திரைகள் நமக்கு நன்மையை விட தீமைகளை அதிகம் செய்கிறது. (உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்).

மேலும், இது போன்ற ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவதற்கு பதிலாக, ஹார்மோன்களை சீராக்க இயற்கை தீர்வினை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு உடல் எடை கூடுவது, மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் குழப்ப நிலை ஆகியவற்றை ஹார்மோன் மாத்திரைகள் ஏற்படுத்தும். டாக்டர். தீக்ஷா அவர் கூறிய வீட்டு வைத்தியத்தை எப்படி சாப்பிடுவது என்றும் பகிர்ந்துள்ளார்.

வெந்தயம், எள்ளு மற்றும் வெல்லம் சேர்த்த பானம்

  • 1 கப் தண்ணீர்
  • 1 ஸ்பூன் வெந்தய விதைகள்
  • 1 ஸ்பூன் எள்ளு
  • 1 சிறு துண்டு வெல்லம்
  • 1 டீஸ்பூன் மஞ்சள்தூள்

period drink in tamil

எப்படி செய்ய வேண்டும்?

  • முதலில் ஒரு கப் நீரை சூடாக்கவும்.
  • பின் வெந்தயம், எள்ளு, வெல்லம் மற்றும் மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பின்னர் 5-7 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க விடலாம்.
  • இப்போது இதை வடிகட்டிய பிறகு குடிக்கவும்.
  • விருப்பப்பட்டால் 1/2 எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

வெந்தயத்தின் பயன்கள்

ஈஸ்ட்ரோஜன் அளவின் மீது பைடோ ஈஸ்ட்ரோஜன் நேர்வினை ஆற்றும். மாதவிடாய் காலத்தில் இரத்த ஓட்டத்தை சீராக்கி எண்டோமெட்ரியத்தை தடிமன் ஆக்கும். அதிகப்படியான உடல் சர்க்கரை அளவை குறைக்கிறது,இது மட்டுமல்லாமல் உடல் எடை குறைப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

எள்ளின் பயன்கள்

எள்ளு விதைகள் இன்சுலின் தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் அதிகளவில் ஜிங்க் சத்தும் உள்ளது. எனவே ப்ரொஜஸ்ட்டரான் எனப்படும் ஹார்மோனை அதிகமாக வேலை செய்ய தூண்டுகிறது. இதனால் எள்ளு சீரற்ற மாதவிடாயை மட்டும் அல்ல, வலி மிகுந்த மாதவிடாயை சரிசெய்கிறது.

வெல்லத்தின் பயன்கள்

periods tips in tamil

வெல்லம் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். இது இரத்தம் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும். குளிர் காலத்தில் நம் உடலில் சக்தி குறைவாக இருக்கும் அதை அதிகப்படுத்த வெல்லம் சேர்க்க வேண்டும். இது ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி ஸ்பாஸ் மோடிக் தன்மை கொண்டது. எனவே கருப்பை வலிகளை நீக்கும்.

மஞ்சள் பயன்கள்

மஞ்சள் உட்கொண்டால் கல்லீரலின் நச்சு நீக்கப்படும். தொப்பையை குறைக்க இந்த நீர் அல்லது தேநீரை பருகலாம். மஞ்சளுக்கு ஆன்டி ஸ்பாஸ் மோடிக் தன்மை உள்ளது. இது கருப்பை குழாயை விரிவடைய செய்து மாதவிடாயை சீராக வைக்கிறது. மாதவிடாய் கோளாறுகளை சீர்படுத்த மஞ்சள் நீர் அல்லது தேநீர் தினமும் குடிக்க வேண்டும்.

இந்த பானத்தை எப்படி பருக வேண்டும்

உங்களுடைய மாதவிடாய் 3 அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களோ தள்ளி போனால், இந்த தேநீரை 12 வாரங்கள் தினமும் காலையில் குடிக்க வேண்டும். உங்கள் மாதவிடாய் 1-2 மாதங்கள் தள்ளி வருகிறது என்றால் மாதவிடாய் காலத்திற்கு 2 வாரங்களுக்கு முன்னர் இதை மாதவிடாய் வரும் வரை குடிக்க வேண்டும். உங்கள் மாதவிடாய் 15-25 நாட்கள் தள்ளி வந்தால், மாதவிடாயின் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னிருந்து இதை குடிக்கலாம்.

டாக்டர். தீக்ஷா கூறுவதாவது: இந்த பானத்தை தினமும் உட்கொண்டு வந்தால் மாதவிடாய் சீரான முறையில் வரும். ஆனால் அத்துடன் உங்களுக்கு ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை முறையும் தேவை. உடற்பயிற்சி, நல்ல தூக்கம், ஆரோக்கிய உணவு, மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பண்பு ஆகியவை தேவை.

இதுவும் உதவலாம்:ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்ய உதவும் சீட் சைக்ளிங்!

குறிப்பு: ஒரு முறை ஆயுர்வேத நிபுணரின் ஆலோசனையை பெற்ற பிறகு இவற்றை பின்பற்றி வந்தால், உங்களுக்கு பக்க விளைவுகள் இல்லாத முழுமையான தீர்வுகள் கிடைக்கும்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com