herzindagi
image

ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை பெற வேண்டுமா? இந்த வழிமுறைகளை அவசியம் பின்பற்றவும்

ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றுவதன் மூலம் நீண்ட ஆயுளை சாத்தியப்படுத்தலாம்.
Editorial
Updated:- 2025-11-22, 10:08 IST

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இதற்கு விலையுயர்ந்த சிகிச்சைகள் உள்ளிட்டவை தேவையில்லை. உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய பழக்கவழக்கங்கள் மூலம் இதனை நீங்கள் அடையலாம். அவை என்னவென்று இதில் பார்ப்போம்.

உடல் உழைப்பு அவசியம்:

 

உடற்பயிற்சி என்பது ஆயுளை நீட்டிப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும். தினசரி உங்கள் உடற்பயிற்சி நேரத்தில் 15 நிமிடங்கள் கூடுதலாக சேர்ப்பது, இளம் வயதில் மரணத்தின் அபாயத்தை 4% குறைக்கக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு வாரத்தில் 150 நிமிடங்கள் மிதமான உடல் செயல்பாட்டை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இளம் வயது மரணத்தின் அபாயத்தை 22% வரை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நடைபயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற எளிய செயல்பாடுகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.

 

மேலும் படிக்க: World heart day: உங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமானால் இந்த உணவுகளை நீங்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்

 

சரியான உணவின் முக்கியத்துவம்:

 

உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும் உணவைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இது உடல் எடையை பராமரிக்கவும், நாள்பட்ட நோய்களை தடுக்கவும் உதவும்.

Balanced diet

மேலும் படிக்க: சிறுநீர்ப்பாதை தொற்றை குணப்படுத்தும் எளிய வீட்டு வைத்திய முறைகள்; இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்

 

தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்:

 

உறக்கம் என்பது சமரசம் செய்ய முடியாத ஒன்றாகும். தூக்கமின்மை என்பது இளம் வயதில் மரணத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணி நேரம் வரை சரியான தூக்கத்தை பெறுவதை இலக்காக கொள்ளுங்கள். சரியான தூக்கம் உங்கள் உடலை சரிசெய்யவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் அவசியம்.

Sleep

 

மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்:

 

ஆயுளைக் குறைக்கும் மிகப் பெரிய எதிரி மன அழுத்தம் ஆகும். இது உங்கள் உடலில் கார்டிசால் (Cortisol) என்ற ஹார்மோனை அதிக அளவில் சுரக்க செய்கிறது. தியானம், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் இதயம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவும். மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

 

உங்கள் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்:

 

நீண்ட ஆயுளுக்கான பொன்னான விதி மகிழ்ச்சியுடன் இருப்பது தான். சந்தோஷமாக இருக்கும் நபர்களுக்கு இளம் வயதில் மரணம் ஏற்படும் வாய்ப்பு 3.7% குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. எனவே, உங்களையும், உங்கள் மகிழ்ச்சியையும் முக்கியமானதாகக் கருதி, அதற்கு முன்னுரிமை அளிக்க இது மற்றொரு காரணமாக அமைகிறது. நீங்கள் விரும்பியதை செய்யவும், உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் கவனம் செலுத்தவும் இதுவே சரியான நேரம்.

 

இந்த எளிய பழக்கங்களை உங்கள் தினசரி வழக்கத்தில் கடைப்பிடித்து, ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளைப் பெறுங்கள்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com