பல ஆண்டுகளாக சிறுதானியங்களை உணவாக சாப்பிடும் வழக்கம் நம்மிடையே இருந்தது. தற்போது, நாம் வேறு விதமான உணவுகளை அதிகமாக உண்ணும் இந்த காலத்தில், ஊட்டச்சத்துகள் நிறைந்த சிறுதானியங்கள் மீண்டும் நம் உணவு பழக்கத்திற்குத் திரும்பி வருகின்றன.
மேலும் படிக்க: Fatty liver: கல்லீரல் பாதிப்புக்கு இதுதான் முக்கிய காரணம்: நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல் இதோ
நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த சிறுதானியங்கள், நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றதாகவும், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தருவதாகவும் உள்ளன. அதன்படி, சிறுதானியங்களை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிறு தானியங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் ஆகியவை அதிகமாக உள்ளன. இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் இதில் நிறைந்துள்ளன. இவை நரம்பு மண்டலத்தின் செயல்பாடு, எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
குறைந்த கிளைசெமிக் அளவு (Glycemic Index) கொண்ட சிறுதானியங்கள், இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடுகின்றன. இதனால் சர்க்கரை அளவு திடீரென உயராமல் தடுக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த விரும்புவோருக்கும் இது ஒரு சிறந்த தேர்வாகும்.
மேலும் படிக்க: Benefits of almonds: சருமத்தை பொலிவாக்கும்; எலும்புகளை வலுப்படுத்தும் - ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இவற்றில் உள்ள நார்ச்சத்து, எல்.டி.எல் என்று கூறப்படும் கெட்ட கொழுப்பை குறைத்து, எச்.டி.எல் என்று கூறப்படும் நல்ல கொழுப்பின் அளவை பராமரிக்கிறது. இதன் மூலம் இருதய நோய் அபாயங்கள் குறைகின்றன.
சிறுதானியங்களில் உள்ள மெதுவாக செரிமானமாகும் கார்போஹைட்ரேட்டுகள், அடிக்கடி பசி உணர்வு ஏற்படாமல் உடலுக்கு நீண்ட நேரம் ஆற்றலை அளிக்கின்றன. அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், இவை நிறைவான உணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகின்றன.
ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு தேவையான நார்ச்சத்து சிறுதானியங்களில் ஏராளமாக உள்ளது. குறிப்பாக, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களில் உள்ள பாலிஃபீனால்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதற்கும், செரிமான மண்டலத்தில் ஏற்படும் அழற்சியை குறைப்பதற்கும் உதவுகின்றன. சிறுதானியங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com