இன்றைக்கு ஆண்கள் முதல் பெண்கள் வரை சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பேக் பெயின் எனப்படும் முதுகுவலி. பாரபட்சம் இல்லாமல் அனைத்து வயதினருக்கும் சந்திக்கும் பிரச்சனை என்றாலும் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய், கர்ப்ப காலம் என நிறைய மாற்றங்களை பெண்கள் எதிர்கொள்வதால் முதுகு வலி பெண்களுக்கான நோய்களில் ஒன்றாகவே மாறிவிடும். அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களாக இருந்தாலும், இல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி ஒவ்வொரு பெண்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இது அவர்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
பொதுவாக பெண்களுக்கு கீழ் முதுகுவலியுடன் தொடர்புடைய நிலைகள் முதல் மாதவிடாய் வலி, இடுப்பு அழற்சி நோய், நார்த்திசுக்கட்டிகள், கர்ப்பம் தொடர்பான முதுகுவலி, கருப்பை நீர்க்கட்டிகள் போன்ற பாதிப்புகள் இருந்தாலும் முதுகுவலி ஏற்படுகிறது. என்ன தான் இவையெல்லாம் பெண்களுக்கான பொதுவான பாதிப்புகள் முறையான கவனிப்பு என்பது அவசியமான ஒன்று. இல்லையென்றால் 5 நிமிடங்கள் கூட ஒரு இடத்தில் உட்கார முடியாமலும், நிற்க முடியாமலும் அவதிப்படுவார்கள். இதிலிருந்து தப்பித்து வருவது என்பது பெண்களுக்கு சவாலான விஷயம். ஆனாலும் சில வாழ்க்கை முறைகளை மாற்றினாலே கொஞ்சம் முதுகு வலியிலிருந்து தப்பிக்க முடியும். இதோ என்னென்ன தெரியுமா?
முதுகுவலி தீர்விற்கான டிப்ஸ்கள்:
- பெண்கள் எப்போதும் தசைகளை வலுவுடன் வைத்திருக்க வேண்டும். இதற்காக உள்ள பிரத்யேக யோகாசனங்கள் மற்றும் சில வெயிட் லிப்டின் போன்ற உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
- சரிசமான இடத்தில் எப்போதும் உட்கார வேண்டும். சமநிலையின்றி உட்காரும் போது இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படுவதோடு முதுகு வலியையும் பெண்களுக்கு ஏற்படுத்தும்.
- அனைத்து நோய்களும் தூக்கம் சிறந்த தீர்வாக அமையும். வீடுகளில் அல்லது அலுவலகத்தில் வேலைப் பார்த்தாலும் உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சிறிது நேரமாவது தூங்க வேண்டும். நீங்கள் தூங்கும்போது உங்கள் முதுகில் அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- உடல் எடை அதிகமாக இருந்தாலும் முதுகு வலி ஏற்படக்கூடும். எனவே உடல் எடையை எப்போதும் உங்களது உயரத்திற்கு ஏற்ப நிர்வகித்துக் கொள்ளுங்கள்.
முதுகுவலியை எவ்வாறு குணப்படுத்துவது?
- பெண்களுக்கு முதுகு வலி அதிகமாக இருந்தால் தலையணை எதையும் வைக்காமல் கால்களை நேராக நீட்டிப் படுக்கவும்.
- நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு வலி இருக்கும் இடங்களில் லேசாக தடவி விடவும். பின்னர் சூடான நீரைக் கொண்டு ஒத்தனம் வைக்கவும்.
- முதுகுவலி தசைப்பிடிப்பு அல்லது காயம் ஏதேனும் இருந்தால், அந்த இடத்தில் ஐஸ் கட்டி ஒத்தனம் வைக்கவும். இதை தசைப்பிடிப்பு அல்லது காயம் ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் வைத்தால் சிறப்பாக செயல்படும்.
- மேலும் தோள்பட்டை, கழுத்து மற்றும் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு பக்கமாக அல்லது நேராக படுக்கும் போது வலி குறையும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது, முதுகுத் தண்டவடத்துக்குறைவா அழுத்தம் செல்வதால் வலி குறையக்கூடும்.
மேலும் படிங்க:மறதி நோய் பாதித்தவர்களைப் பராமரிக்கும் முறை இது தான்!

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation