இன்றைய பெண்கள் பலரும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனாலும் அவர்களின் உணவு பழக்க வழக்கம், உட்கார்ந்த இடத்திலேயே பல மணி நேரம் வேலை செய்வது,உடல் நலத்தில் அக்கறையின்மை போன்ற பல காரணங்களால் நாளுக்கு நாள் உடல் எடை அதிகரிக்கிறது. மாடர்ன் உடைகள் முதல் சேலைகள் வரை எது அணிந்தாலும் அவர்களுக்கு பிட்டாக இருக்காது. குண்டான உருவம், வயிற்றில் உள்ள அதிகமான கொழுப்பு அதாவது தொப்பை அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என ஜிம்மிற்கு செல்வது, உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுவது என பல முயற்சிகளில் பெண்கள் இறங்கிவிடுகின்றனர். ஆனால் இது அந்தளவிற்கு ஒர்க் அவுட் ஆகாது. சாப்பாடு மீதாமாகும் என்பதற்காக வீட்டில் இருப்பதை சாப்பிட்டுவிடுகிறோம். இதனால் எந்த டயட் முயற்சியில் இருந்தாலும் பலனில்லை. இது போன்ற நிலையில் உள்ள பெண்களாக நீங்களும்? இயற்கையான முறையில் எப்படி குறைக்க முடியும்? என்பதை இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
தொப்பையைக் குறைக்கும் சீரக தண்ணீர்:
- சீரகத்தில் நார்ச்சத்து, வைட்டமின் பி1, பி2 உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி தினமும் சீரகத்தை உணவு முறையல் சேர்த்துக் கொள்ளவும். உங்களால் வெறுமனே சாப்பிட முடியாது என்றால், சீரகத்தை ஊற வைத்து அதன் தண்ணீரைக் குடிக்கலாம்.
- சீரகம் அல்லது சீரக தண்ணீரை தினமும் நீங்கள் சாப்பிடும் போது உங்களது பசியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் மெட்டபாலிசத்தை அதிகரித்து செரிமான சக்தியை சீராக்குகிறது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதையும் தடுக்க முடியும்.
- வாயு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் தொடர்பான எவ்வித பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படாது.
- இயற்கையாகவே சீரகத்திற்கு கெட்ட கொழுப்புகளை எரிக்கும் தன்மை உள்ளதால், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் சீரகத்தை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். கெட்ட கொழுப்புகளின் உற்பத்தியைத் தடுப்பதோடு, நல்ல கொழுப்பின் அளவையும் அதிகரிக்கிறது.
சீரக தண்ணீரை எப்படி செய்வது?
இரவு தூங்க செல்வதற்கு முன்னதாக ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 ஸ்பூன் சீரகத்தை ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊறிய பின்னர் காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம். சீரக தண்ணீரை வடிகட்டி கொதிக்க விடவும். இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தொடர்ந்து 3 வாரங்களுக்கு குடித்து வந்தால் போதும் உடல் எடையை கணிசமாக குறைக்க முடியும். வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகளும் இருக்கின்ற இடம் தெரியாமல் ஓடிவிடும். அப்புறம் என்ன? இனி வயிறு தொப்பையைக் குறைக்க தாராளமாக சீரகத்தை உங்களது உணவுமுறையில் சேர்த்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation