
கர்ப்பிணிகளின் வயிற்றில் குழந்தைகள் வளரத் தொடங்கிய நாளிலிருந்து உடலில் பல மாற்றங்களைச் சந்திக்கிறார்கள். குறிப்பாக சீரற்ற இதய துடிப்பு, சீரற்ற இரத்த இரத்தம் போன்ற சில மாற்றங்களைச் சந்திக்கிறார்கள். இதனால் வயிறு உப்பிசம், செரிமானக் கோளாறு போன்ற உடல் நல பிரச்சனைகளோடு கால் வீக்கமும் ஏற்படும். இவற்றைச் சரி செய்ய பெரும் மெனக்கெடுகள் தேவையில்லை. கீழ்வரக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றினாலே போதும்.
கர்ப்ப காலத்தில் கால்கள் வீக்கம் இருந்தால் எப்போதும் கால்களை நேரடியாக தொங்கவிடாமல், சேர் அல்லது டேபிளில் நீட்டி உட்கார்ந்துக் கொள்ள வேண்டும். கால்களைக் கீழே தொங்கவிடும் போது கால் வீக்கம் குறைவதற்கு வாய்ப்பில்லை.
மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்குக் கர்கப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா?
கர்ப்பிணிகளுக்கு கடைசி மூன்று மாதங்களில் தான் கால் வீக்கம் ஏற்படும். குறிப்பாக அதிக நேரம் கணினி முன்னதாக உட்கார்ந்துக் கொண்டே வேலைப்பார்ப்பவர்கள், சமையல் அறையில் அதிக நேரம் நின்றுக்கொண்டு வேலைப்பார்ப்பதால் கால் வீக்கம் ஏற்படுகிறது. எனவே முடிந்தவரை வேலைப்பார்க்கும் போது ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் உடல் சோர்வாகிறதா? கர்ப்பிணிகள் மறக்காமல் இந்த உணவுகளைச் சாப்பிடுங்க!
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com