ஹார்மோன் ஏற்ற இறக்கங்களைப் பெண்கள் அடிக்கடி சந்திக்கிறார்கள். இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையும் ஏற்படுகிறது. இந்நிலையை சமாளிக்க பலரும் மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். இதற்கு மாறாக, இயற்கையான முறையில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த விரும்புபவர்கள் சீட் சைக்கிளிங் முறையைப் பின்பற்றலாம்.
விதைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. அது மட்டுமின்றி விதைகளைக் கொண்டு சீட் சைக்கிளிங் முறையைப் பின்பற்றும்போது, நம் உடலின் ஹார்மோன்கள் சமநிலை அடைந்து முறையாக சுரக்க தொடங்குவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் உள்ளன, இவை உடலின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் மத்திய அரசு மருத்துவமனையான ESIC மருத்துவமனையின் உளவியல் நிபுணரான ரித்து பூரி அவர்கள், ஹார்மோன்களை சமநிலைப்படுத்த சீட் சைக்கிளிங் எவ்வாறு உதவியாக இருக்கும் என்பதையும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
விதைகளை சிறப்பான வழியில், சிறப்பான சுழற்சியில் எடுத்துக் கொள்வதே சீட் சைக்கிளிங் ஆகும். இதில் ஃபோலிகுலர் மற்றும் லூட்டல் என இரு கட்டங்கள் உள்ளன. முதல் கட்டமான ஃபாலிக்குலார், மாதவிடாயின் முதல் நாளில் தொடங்கி 14வது நாள்வரை நீடிக்கும். மறுபுறம் இரண்டாம் கட்டமான லூட்டல் 14வது நாளில் தொடங்கி 28வது நாளில் முடிவு பெறும்.
இந்த பதிவும் உதவலாம்:மென்சஸ் கப் பயன்படுத்துவதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!
ஒரு பெண் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் போது, அவரது உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தி சீராக இருக்காது அல்லது தவறான நேரத்திலும் சுரக்கலாம். இவற்றை சரியான நேரத்தில் சுரக்கச் செய்வதற்கு சீட் சைக்கிளிங்க முறை பெரிதும் உதவுகிறது.
பொதுவாக பெண்கள், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், மாதவிடாய்களை ஒழுங்குபடுத்தவும் சீட் சைக்கிளிங் முறையைப் பின்பற்றுகிறார்கள். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதால், PCOD பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நன்மை பயக்கிறது. மேலும் தைராய்டு, கருவுறுதல், ஆஸ்டியோபோரோசிஸ், அதிக எடை போன்ற பிரச்சனைகள் உள்ள பெண்களும், சீட் சைக்கிளிங் முறையை பின்பற்றி பயனடையலாம்.
இந்த பதிவும் உதவலாம்: PCOS இருப்பதற்கான 3 அறிகுறிகளும், அதற்கான சிகிச்சையும்
நீங்களும் இது போன்ற பிரச்சனைகளை எதிர் கொண்டால், உணவியல் நிபுணரை ஆலோசனை செய்த பின் சீட் சைக்கிளிங் முறையை பின்பற்றலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com